Home / உலகச் செய்திகள் / ஈராக்கில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் – 93 பேர் உயிரிழப்பு

ஈராக்கில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் – 93 பேர் உயிரிழப்பு

ஈராக்கில் மோசூல் நகரம் அருகே ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது.

ஈராக் நாட்டின் மோசூல் நகரிலுள்ள சுற்றுலாத் தலமான தீவுக்கு செல்வதற்காக 80க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 150 பேர் சுற்றுலாப் படகில் திக்ரிஸ் ஆற்றில் சென்றனர்.

சில தினங்களுக்கு முன்பு அணைகள் திறக்கப்பட்டதால் ஆற்றில் கூடுதலான வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது திடீரென படகு பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

எச்சரிக்கையை மீறி அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் சென்றதால்தான் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. ஆற்றில் விழுந்த பயணிகள் உயிருக்காக தத்தளித்தனர்.

அவர்களை மீட்க உடனடியாக யாரும் வராத நிலையில்  இந்த விபத்தில் 93 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகி உள்ளது.  மீட்கப்பட்ட பலரது நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிர்ச்சேதம் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

சவுதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு!!

சவுதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் அம்பாறை மருதமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் ...

%d bloggers like this: