Home / உள்நாட்டு செய்திகள் / இலசவ மடிக்கணனி திட்டத்தினை இரத்து செய்த மஹிந்த அரசு

இலசவ மடிக்கணனி திட்டத்தினை இரத்து செய்த மஹிந்த அரசு

மஹிந்த ராஜபாக்ச புதிய பிரதமராக பதவியேற்றமை அரசியல் விதிகளுக்கு முரணானது என இலங்கை அரசியல் வட்டாரத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது

அதனை தவிர்க்க உடனடியாக மஹிந்த அரசு பல கவர்சிகரமான அறிவிப்புகளை மக்களுக்கு வெளியிட்டது.

ஆட்சிக்கு வந்து அடுத்த நாளே எரிபொருட்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டது. பல அத்தியாவசிய பொருட்களின் விலை மற்றும் தொலை தொடர்பு வரிகள் என்பன குறைக்கப்பட்டன.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் டாலரின் விலை அதிகரிப்பால் இறக்கு மதி விலைகள் அதிகரித்திருந்த நிலையில் மஹிந்த அரசால் மட்டும் எப்படி எரிபொருள் விலையை குறைக்க முடிந்தது என பலரும் வியந்தனர்.

ஆனால் எரிபொருள் விலையை குறைத்து மக்களின் மனங்களை வெல்ல மஹிந்த அரசு செய்த வேலையால் மறுபுறத்தில் இலங்கை பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நல்ல ஒரு திட்டம் கைவிடப்பட உள்ளது.

உயர்தர மாணவர்களுக்கு நல்லாட்சியின் தேசிய அரசாங்கத்தில் வழங்க இருந்த இலசவ மடிக்கணனி திட்டத்தினை இரத்து செய்தே மஹிந்த அரசு எரிபொருள் விலையை குறைத்துள்ளது.

இதன் மூலம் பாடசாலை மாணவர்களின் தகவல் தொழிநுட்ப அறிவை மெருகூட்ட கிடைத்த நல்ல சந்தர்ப்பம் தவறவிடப்பட்டுள்ளது.

மஹிந்த அரசு நடத்திய நாடகத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வெளிப்படுத்தியுள்ளார். மஹிந்த மைத்திரியின் இடைப்பட்ட ஆட்சியில் பெற்றோலின் விலை குறைக்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் திருப்திப்பட்டுக் கொள்ளவேண்டாம் எனவும் சம்பிக்க இது தொடர்பில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Radio tamizha

x

Check Also

குண்டுத்தாக்­கு­தலில் உயிரிழந்தோருக்கு 119.3 மில்­லியன் ரூபா நஷ்­ட­ஈடு!!

ஈஸ்டர் தினத்­தன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாத குண்டுத்தாக்­கு­த­லுக்கு இலக்­கான கொழும்பு கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம், நீர்­கொ­ழும்பு கட்­டு­வாப்­பிட்­டிய புனித செபஸ்­தியார் ...

%d bloggers like this: