Home / விளையாட்டுச் செய்திகள் / இலங்கை VS மேற்கிந்திய தீவுகள் இறுதி T20 போட்டி இன்று!

இலங்கை VS மேற்கிந்திய தீவுகள் இறுதி T20 போட்டி இன்று!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 25 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்தநிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இன்றிரவு 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இலங்கை அணி இன்றைய தினம் களமிறங்கவுள்ளது.

About Vithu

x

Check Also

RADIOTAMIZHA | 2021 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி தகுதி..!

2021ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு இந்திய மகளிர் அணி தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் ...