Home / உள்நாட்டு செய்திகள் / இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவலை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டவர்கள் இலங்கையில் பெற்றுக் கொள்ளும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அறிவிடப்படும் வட் வரியை மீண்டும் அவர்களிடமே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2018 வரவு செலவுத் திட்டத்திற்கமைய செயற்படுத்தப்பட்ட இந்த வேலைத்திட்டம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமுலாகவுள்ளது.

இந்த செயற்றிட்டம் அடுத்த மாதத்தில் அமுலுக்கு வரும் என அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வட் வரி திருத்த விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.அதற்கமைய இலங்கை வரும் சுற்றுலா பயணிகளிடம் அறவிடப்படும் 15 வீத வட் வரியை அவர்கள் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வட் வரியை மீட்கும் முறை ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ளது.

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாம் இங்கு பெற்றுக் கொள்ளும் பொருட்களுக்காக அறவிடப்படும் 15 வீத வட் வரியை மீண்டும் விமான நிலையத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

About இனியவன்

x

Check Also

வவுனியாவில் இளைஞன் மீது கத்தி குத்து

  வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் இளைஞன் ஒருவர் மீது கத்திக் குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ...

%d bloggers like this: