Home / உள்நாட்டு செய்திகள் / இலங்கை மக்களை தாக்கவுள்ள நோய்

இலங்கை மக்களை தாக்கவுள்ள நோய்

இலங்கையில் முதன் முதலாக நாய்களிடமிருந்து பரவக் கூடிய ஒரு வகை நோய் இனங்காணப்பட்டுள்ளமையால் மக்களை அவதானமாக செயற்படுமாறு பேராதனை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை வழங்கியுள்ளனர்.

மேலும் குறித்த நோய் இதுவரை காலமும் தென்னாபிரிக்கா நாடுகளிலேயே அதிகளவு பரவலாக காணப்பட்டு வந்த நிலையில், தற்போது இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அண்மையில் கண் நோயால் பாதிக்கப்பட்ட நாயொன்று பேராதனை கால்நடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த நாயை சோதனைக்கு உட்படுத்தியபோது, ட்ரை-பெனசோமா (Trypanosoma) என்ற நோய் ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதாக பேராசிரியர் தங்கொல்ல தெரிவித்துள்ளார்.

இந்த நோய் மக்களுக்கு பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தாத போதிலும் தோல் நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளமையால் செல்ல பிராணியாக நாயை வளர்க்கின்றவர்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டு என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

 

About அகமுகிலன்

x

Check Also

வீட்டுக் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு!!

வவுனியா புளியங்குளத்தில் வீட்டுக் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. புளியங்குளம் பெரியமடு விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாருடன் இணைந்து ...

%d bloggers like this: