Home / உள்நாட்டு செய்திகள் / இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான ஓர் செய்தி!

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான ஓர் செய்தி!

தே.அ.அட்டை மற்றும் கடவுச்சீட்டினை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டினை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியோனி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள 331 பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆட்பதிவு திணைக்கள கிளைக் காரியாலயங்கள் ஊடாக இவை விநியோகிக்கப்படவுள்ளன. பிரதேச செயலகங்களில் ஒப்படைக்கப்படும் விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலமாக கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலயத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதன் மூலம் மீண்டும் பிரதேச செயலகம் மூலம் இவ்வடையாள அட்டை விநியோகிக்கப்படும்.

இதேவேளை, கடவுச்சீட்டை மாவட்டச் செயலகங்கள் ஊடாக வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என குடிவரவு, குடியகல்வு திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

About இனியவன்

x

Check Also

படைப்புழுவை கட்டுப்படுத்த மன்­னார் மாவட்டத்­தில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!!

மன்­னார் மாவட்டத்­தில் படைப்­பு­ழு­வைக் கட்­டுப்­ப­டுத்­து­தல் தொடர்­பான கருத்­த­ரங்கு  மாவட்ட செய­ல­கத்­தின் கேட்­போர் கூடத்­தில் மாவட்ட செய­லர் சி.ஏ. மோகன்­றாஸ் தலை­மை­யில் ...

%d bloggers like this: