Home / உள்நாட்டு செய்திகள் / இலங்கை ஜனாதிபதியின் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை ஜனாதிபதியின் விடுத்துள்ள கோரிக்கை

அரச நிறுவனங்களில் மோதல் நிலைமைகளைத் தவிர்த்து அமைதியைக் கடைப்பிடிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான சில அரசியல் கட்சிகள் சர்வதேச ரீதியில் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முயற்சிக்கின்ற பின்புலத்தில், அனைத்து அரச நிறுவனங்களிலும் அமைதியைக் கடைப்பிடிப்பதுடன், அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிணங்க அரச நிறுவனங்களுக்குள் எச்சந்தர்ப்பத்திலும் வன்முறைக்கு இடமளிக்க வேண்டாமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

 

About இனியவன்

x

Check Also

வீட்டுத்திட்டத்திற்கான நிதி வழங்கப்படவில்லை; என கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!!

வவுனியா பாரதிபுரத்தில் வீட்டுத்திட்டத்திற்கான நிதி வழங்கப்படவில்லை என கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா பாரதிபுரத்தில் 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ...

%d bloggers like this: