Home / விளையாட்டுச் செய்திகள் / இலங்கை கிரிக்கெட் அணிக்கு 8000 வரையான இராணுவத்தினர் பாதுகாப்பு…!!

இலங்கை கிரிக்கெட் அணிக்கு 8000 வரையான இராணுவத்தினர் பாதுகாப்பு…!!

பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கராச்சி நகரில் இன்று நடைபெறவுள்ளது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

எனினும், இன்றைய போட்டி மழை காரணமாக தடங்கல் ஏற்படும் சாத்தியம் மிக குறைவாகவே உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லாகூர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் அணியொன்று நீண்ட போட்டித் தொடருக்காக பாகிஸ்தானை நோக்கி சென்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

பாகிஸ்தான் – கராச்சி சர்வதேச மைதானத்தில் 10 வருடங்களின் பின்னரே சர்வதேச போட்டியொன்று நடைபெறுகிறது.

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணிக்கு, அரசத் தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 8000 வரையான இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இலங்கை VS மேற்கிந்திய தீவுகள் இறுதி T20 போட்டி இன்று!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. மேற்கிந்திய ...

%d bloggers like this: