Home / விளையாட்டுச் செய்திகள் / இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் புதிய தலைவராக சம்மி சில்வா 27 வாக்குகளால் தெரிவு!

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் புதிய தலைவராக சம்மி சில்வா 27 வாக்குகளால் தெரிவு!

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் புதிய தலைவராக இன்று இடம்பெற்ற தேர்தலில் சம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சம்மி சில்வா 83 வாக்குகளை பெற்றதுடன் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜயந்த தர்மதாசவிற்கு 56 வாக்குகளே கிடைத்துள்ளது.

இதனால் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் புதிய தலைவராக சம்மி சில்வா 27 மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு சிக்கல்கள் காரணமாக பிற்போடப்பட்டு வந்த இலங்கை கிரிக்கட் நிறுவன தேர்தல் இன்று காலை விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றது.

குறித்த பதவிக்காக சம்மி சில்வா, ஜயந்த தர்மதாச மற்றும் மதிவானன் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதன் போது இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் உப தலைவர்கள் பதவிக்காக ரவின் விக்கிரமரத்ன 82 வாக்குகளையும், மதிவானன் 80 வாக்குகளையும் பெற்று தெரிவாகினார்.

இந்த பதவிக்காக போட்டியிட்ட அமைச்சர் அர்ஜூன ரணதுங்க 72 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.

மேலும் செயலாளர் பதவிக்காக போட்டியிட்ட மொஹான் டி சில்வா 96 வாக்குகளை பெற்று தெரிவாகி அவரை எதிர்த்து அந்த பதவிக்காக போட்டியிட்ட நிஸாந்த ரணதுங்க 45 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.

2019 முதல் 2021 வரையான இரண்டு வருட காலப்பகுதிக்காக தலைவர், உப தலைவர் இரண்டு பேர், செயலாளர், உப செயலாளர், பொருளாளர் மற்றும் உப பொருளாளர் ஆகிய 7 பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதற்காகவே   இந்த தேர்தல் இடம்பெற்றுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

நாம தான் பாதுகாக்க வேண்டும்… மக்களுக்கு லசித் மலிங்கா வேண்டுகோள்

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சி இன்று இலங்கையில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ...

%d bloggers like this: