Home / உள்நாட்டு செய்திகள் / இலங்கையில் முடியாது என கூறிய குற்றப்புலனாய்வு பிரிவினர்! மீண்டும் அமெரிக்காவிற்கே அனுப்ப கோரிக்கை

இலங்கையில் முடியாது என கூறிய குற்றப்புலனாய்வு பிரிவினர்! மீண்டும் அமெரிக்காவிற்கே அனுப்ப கோரிக்கை

மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதை குழியிலிருந்து மீட்க்கப்பட்ட மனித எச்சங்களை அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள பீற்றா நிறுவனத்திற்கு அனுப்புமாறு மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா கட்டளையிட்டுள்ளார்.

குறித்த மனித எச்சங்கள் இலங்கையில் ஆய்வு செய்யப்பட முடியாது என குற்றப்புலனாய்வு பிரிவினரினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டமைக்கு அமைவாக நீதவான் இந்த கட்டளையை வழங்கியுள்ளார்.

மன்னார் ‘சதொச’ மனித புதை குழி மற்றும் மாந்தை மனித புதை குழி ஆகிய இரு வழக்கு விசாரனைகளும் மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் இன்று விசாரனைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கு விசாரனையானது கட்டளைக்காக காணப்பட்டது. ஏற்கனவே அரச சட்டத்தரணிகளினாலும், பாதிக்கப்பட்ட தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட சமர்ப்பனங்களின் அடிப்படையில் குறித்த கட்டளை எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையிலேயே மாந்தை மனித புதைகுழி எச்சங்கள் இலங்கையில் ஆய்வு செய்யப்பட முடியாது என குற்றப்புலனாய்வு பிரிவினரினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டமைக்கு அமைவாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பிலும், குற்றப்புலனாய்வு பிரிவினரின் அறிக்கைகளின் படியும் இந்த எச்சங்களையும் மீண்டும் புளோரிடா பீற்றா நிறுவனத்திற்கு அனுப்புமாறு கட்டளை கிடைக்கப்பெற்றுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக மன்றில் முன்னிலையான சிரேஸ்ட சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்

About இனியவன்

x

Check Also

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ...

%d bloggers like this: