Home / உள்நாட்டு செய்திகள் / இலங்கையில் முகப் பூச்சுக்களை பூசும் பெண்களுக்கு கடும் எச்சரிக்கை!

இலங்கையில் முகப் பூச்சுக்களை பூசும் பெண்களுக்கு கடும் எச்சரிக்கை!

ஸ்ரீ லங்காவில் குறைந்த காலத்திற்குள் தோலை வெள்ளையாக்கி அழகுபடுத்துவதற்காக பயன்படுத்தப்படும் முகப் பூச்சுக்கள் தொடர்பில் தொடர்ந்தும் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை சமீபத்தில் மேற்கொண்ட இது தொடர்பான முற்றுகையின் போது மூன்று வகையான களிகளை (கிறீம்) கைப்பற்றியது.

கைப்பற்றப்பட்ட இந்த களிகளை கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்திடம் பரிசோதனைக்காக சமர்ப்பித்து அறிக்கையும் பெற்றுள்ளது.

இந்த அறிக்கைக்கு அமைவாக இந்த களிகளில் அடங்கியுள்ள இரசாயனத்தின் அளவு குறிப்பிடத்தக்க அளவிலும் பார்க்க அதிகளவில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மலிக்கா பியூட்டி கிறீம், கோல்டன் லைஃப் பியூட்டி கிறீம், பின்ஸ் பப்பாயா அன்ட் அலோவேரா மற்றும் நுஹா-வையிட் பியிட்டி கிறீம் ஆகிய கிறீம் வகைகளை விற்பனை செய்த வர்த்தகர்கள் கங்கொடவில நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

இவர்களுக்கு 75 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் எச்சரிக்கையும் செய்யப்பட்டுள்ளது.

மேற்குறித்த அதிக இரசாயனப் பதார்த்தங்களையுடைய களிகளை முக அழகுக்காக பயன்படுத்தும் பெண்களுக்கும் இதுகுறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

About இனியவன்

x

Check Also

நடந்து சென்றவரை மோதித் தள்ளிய மோட்டார் சைக்கிள்…!!ஸ்தலத்தில் இளைஞன் பலி….!!

புத்தூர் மீசாலை பிரதான வீதியில் நேற்று இரவு 9:00 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே ...

%d bloggers like this: