Home / உள்நாட்டு செய்திகள் / இலங்கையில் தூக்கிலிட மீண்டும் தயாராகிறது தூக்கு மேடை!

இலங்கையில் தூக்கிலிட மீண்டும் தயாராகிறது தூக்கு மேடை!

அலுகோசு பதவிக்காக எதிர்வருகின்ற  திங்கட்கிழமை (11) தொடக்கம் விண்ணப்பங்களை கோரப்படவுள்ளன என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு மரண தண்டனை தொடர்பில் ஜனாதிபதியினால் எடுக்கப்படவுள்ள தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று திணைக்களம் கூறியுள்ளது.

மேலும் இதன் பிரகாரம், எதிர்வரும் 25 ஆம் திகதி வரை அலுகோசு பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் இதேவேளை, தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதற்கான உபகரணங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக ஒழுங்குபடுத்துமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு விடுத்த அறிவுறுத்தலுக்கு அமைவாகவே, இந்த பணிகள் முன்னெடுக்கபட்டு வருவதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

About அகமுகிலன்

x

Check Also

வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்

வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உடன் அமுலுக்குவரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பேரில் இந்த இடமாற்றம் ...

%d bloggers like this: