Home / உலகச் செய்திகள் / இலங்கையில் திடீரென அதிகரித்துள்ள அபாய நோய்!

இலங்கையில் திடீரென அதிகரித்துள்ள அபாய நோய்!

இலங்கையில் நீர்வெறுப்பு நோய் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ச.சுகிர்தன் ஊடகங்களுக்கு இன்று அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வருடம் மே மாதத்திலிருந்து கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தினால் மிகவும் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்ற நீர்வெறுப்பு நோயினை (விசர்நாய் கடி) தடை செய்யும் நிகழ்ச்சி திட்டத்தினை மீளவும் சுகாதார அமைச்சிற்கு உள்ளீர்ப்பதற்காக சுகாதார அமைச்சினால் அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இவ் நிகழ்ச்சித் திட்டமானது கடந்த 65 வருடங்களாக சுகாதார அமைச்சினால் செயற்படுத்தப்பட்டு தோல்வியடைந்திருந்தது.

இதனை கருத்தில் கொண்டு ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் 2018ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி முதல் துறைசார் நிபுணர்களை கொண்டு இயங்கும் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்திடம் வழங்கப்பட்டது.

இந்த குறுகிய காலப்பகுதியில் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்களுக்கான கருத்தடை சிகிச்சைகளும், 2600க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்குகளும் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் கடந்த வருடத்தில் விசர் நாய் கடிக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையானது முன்னைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் கணிசமாக குறைந்துள்ளதுடன் கடந்த காலங்களில் இலங்கையில் இருந்து Rinderpest எனும் நோய் முற்று முழுதாக கால்நடை வைத்தியர்களினால் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் விரைவில் மீளப் பெறப்படாத பட்சத்தில் மிகவும் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

About அகமுகிலன்

x

Check Also

ஆபத்தான பறவையை வளர்த்து அந்த பறவையால் உயிரிழந்த முதியவர்!!

ஆபத்தான பறவையை வளர்த்து வந்த 75 வயது முதியவர் அந்த பறவையால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஆஸ்திரேலியாவின் வடக்கு பிளோரிடா ...

%d bloggers like this: