Home / உள்நாட்டு செய்திகள் / இலங்கையின் அரசியல் ரீதியான உள்ளக விடயங்களில் சீனா தலையிடாது இலங்கை தூதுவர்!

இலங்கையின் அரசியல் ரீதியான உள்ளக விடயங்களில் சீனா தலையிடாது இலங்கை தூதுவர்!

இலங்கையின் அரசியல் உள்விவகாரங்களில் தாம் தலையிடுவதில்லை என சீனா குறிப்பிட்டுள்ளது. அத்தோடு, ஏனையநாடுகள் இலங்கை விடயத்தில் தலையிடுவதை எதிர்ப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

கண்டி தலதா மாளிகைக்கு சென்ற இலங்கைக்கான சீன தூதுவர் ய சங் யுவியுவான் அங்கு ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு   தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் மிகவும் சிறந்த உறவு காணப்படுவது அனைவருக்கும் தெரியும். சீனா இலங்கை சிறந்த நண்பன். அத்தோடு, உண்மையான நண்பன்.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 62 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இந்த நாளில் இரு நாடுகளுக்கிடையிலான பிணைப்பு மேலும் வலுப்பெறவேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன்.

இலங்கையின் அபிவிருத்தி தொடர்பாக முடிந்தளவு உதவிகளை நாம்  தொடர்ந்தும் முன்னெடுப்போம். தற்போதும் ஒரே பாதை ஒரே மண்டலம் திட்டத்தின் கீழ் நாம் சிறந்த திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

இரண்டு தரப்புக்கும் நன்மையளிககும் வகையில் நாம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அத்தோடு, கண்டி அதிவேக நெடுஞ்சாலை தொடர்பாகத் தற்போது பேச்சுக்களை முன்னெடுத்துச் செல்கின்றோம். விரைவில் சிறந்த தீர்மான மொன்று எட்டப்படுமென நம்புகின்றோம்.

அதேபோன்று, அரசியல் சர்ச்சைகளின்போது அரசியல் கட்சிகளும் மக்களும் சிறந்த தீர்மானங்களை எடுப்பார்கள் என நாம் நினைக்கின்றோம். இலங்கையின் அரசியல் ரீதியான உள்ளக விடயங்களில் சீனா தலையிடாது. அதேபோன்று ஏனைய நாடுகளும் இவ்விடயத்தில் தலையிடுவதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்” என்றார்.

 

About அகமுகிலன்

x

Check Also

இன்று இரவு பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

இன்று இரவு வேளையில் நாட்டின் அநேகமான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு ...

%d bloggers like this: