Home / விளையாட்டுச் செய்திகள் / இலங்கைக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இந்தியா வெற்றி!!

இலங்கைக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இந்தியா வெற்றி!!

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

லீட்சில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மேத்யூஸ் 113 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா 103 ரன்களும், ராகுல் 111 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர். 43.3 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விராட் கோலி 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் மட்டும் ரோஹித் சர்மா 5 சதங்களை அடித்துள்ளார். இந்த தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 15 புள்ளிகளைப் பெற்றுள்ள இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

தோனியின் ரன் அவுட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த இருவர் மாரடைப்பால் பலி!!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் தோனியின் ரன் அவுட்டை பார்த்து, அதிர்ச்சியடைந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர் மாரடைப்பால் ...

%d bloggers like this: