Home / உள்நாட்டு செய்திகள் / இலங்கைக்கான ஈரானின் தூதுவருடன் ஆளுநர் சந்திப்பு!!

இலங்கைக்கான ஈரானின் தூதுவருடன் ஆளுநர் சந்திப்பு!!

ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் இலங்கைக்கான ஈரானின் தூதுவர்  Mohammad Zaeri Amirani இடையிலான சந்திப்பு இன்று 16 மாலை கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் இடம்பெற்றது.

வடமாகாணத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்ற ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவின்  கரிசனைக்கும் தொலைநோக்கிற்கும் அமைய மத்திய மாகாணத்திலிருந்து நிலக்கீழ் குழாய் வழியாக வடமாகாணத்திற்கு குடிநீரினைக் கொண்டு வருவதற்கு ஈரானிய அரசின் உதவி இதன்போது  ஆளுநரால் கோரப்பட்டது.

இதற்கு சாதகமான சமிக்கை வெளியிட்ட ஈரானிய தூதுவர், முதற்கட்டமாக இது தொடர்பிலான சாத்தியமான வழிகளை ஆராயும் பொருட்டு இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற  ஈரானின் மூன்று நிறுவனங்களை  எந்தவித கட்டணங்களும் இல்லாமல் தன்னார்வ ரீதியில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக  குறிப்பிட்டார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!!

மன்னாரில் உருமலையில் 24 காலை திகதி நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்ட ...

%d bloggers like this: