Home / உள்நாட்டு செய்திகள் / இறுதி நேரங்களில் தனது விஜயத்தை ரத்து செய்யும் மைத்திரிபால சிறிசேன!

இறுதி நேரங்களில் தனது விஜயத்தை ரத்து செய்யும் மைத்திரிபால சிறிசேன!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேற்றைய மட்டக்களப்பு விஜயம் இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டது.

கிழக்கு மாகாண கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று காலை மட்டக்களப்பில் இடம்பெறுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இறுதி நேரத்தில் ஜனாதிபதியின் மட்டக்களப்புக்கான விஜயம் இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் விஜயம் இரத்துச் செய்யப்பட்டமைக்கான காரணம் எதனையும் ஏற்பாட்டுக் குழுவினர் வெளியிடவில்லை.

கடந்த வாரமும் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவிருந்த மைத்திரி இறுதி வேளையில் தனது விஜயத்தை ரத்துச் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

About அகமுகிலன்

x

Check Also

படைப்புழுவை கட்டுப்படுத்த மன்­னார் மாவட்டத்­தில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!!

மன்­னார் மாவட்டத்­தில் படைப்­பு­ழு­வைக் கட்­டுப்­ப­டுத்­து­தல் தொடர்­பான கருத்­த­ரங்கு  மாவட்ட செய­ல­கத்­தின் கேட்­போர் கூடத்­தில் மாவட்ட செய­லர் சி.ஏ. மோகன்­றாஸ் தலை­மை­யில் ...

%d bloggers like this: