Home / உள்நாட்டு செய்திகள் / இறுதியாக கண்ணீர் சிந்தும் பெண்ணின் ஓவியத்தை வரைந்த சிறுவன்!!

இறுதியாக கண்ணீர் சிந்தும் பெண்ணின் ஓவியத்தை வரைந்த சிறுவன்!!

வவுனியாவைச் சேர்ந்த சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி கற்று வந்த சிவனேசன் விதுசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

வரைதல் உட்பட பல்வேறு திறமைகளை தன்னகத்தே கொண்டிருந்த சிறுவன் இறுதியாக கண்ணீர் சிந்தும் பெண்ணின் ஓவியம் ஒன்றை வரைந்திருந்தார்.

சிறுவனுக்குப் புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு கிகிச்சைக்கான பணத்தைத் திரட்டுவதற்கு நடவடிக்கைகளை பலரும் மேற்கொண்டிருந்தனர்.

மேலதிக சிகிச்சைக்காக பலரின் நிதியுதவியுடன் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

 

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA |நேற்றைய தினம் 40 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் 40 ...

%d bloggers like this: