Home / உலகச் செய்திகள் / இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால் உலகிற்கு பேரழிவு ஏற்படும்- சீனா எச்சரிக்கை!!

இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால் உலகிற்கு பேரழிவு ஏற்படும்- சீனா எச்சரிக்கை!!

தைவான்  பிரச்சனையில் குறுக்கிடுவதை அமெரிக்கா கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள சீனா, இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால் உலகிற்கு பேரழிவு ஏற்படும் என  எச்சரித்துள்ளது.

தைவான் நாடு தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. தைவான் நாட்டிற்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுவது சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தென் சீன கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலும் வரும் நிலையில், தைவான் ஜலசந்தியில் அமெரிக்காவின் இரு போர் கப்பல்கள் சென்றதற்கும் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் பேசிய சீன பாதுகாப்பு துறை அமைச்சர் வெய் பெங், தைவான் உடனான தங்களது உறவில் யாரேனும் குறுக்கிட முயன்றால், அதனை எதிர்த்து இறுதி வரை போராட தயார் என்றார். தற்பாதுகாப்புக்காகவே சீனா ராணுவம் தாக்குதல் நடத்தும் என்ற போதிலும், தங்களது நலன்களுக்கு எதிரான தாக்குதலை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது என தெரிவித்தார்.

சீனா – அமெரிக்கா இடையே போர் ஏற்பட்டால் இரு நாடுகளுக்கு மட்டுமின்றி உலகிற்கே பேரழிவை ஏற்படுத்தும் என்று இருதரப்பும் உணர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். சீனாவிடம் இருந்து தைவானை பிரிக்கும் முயற்சி ஒரு போதும் வெற்ற பெறாது என்று தெரிவித்த வெங், மீறி யாரேனும் செயல்பட்டால் எந்த விலை கொடுத்தேனும் சீன ராணுவம் சண்டையிடும் என கூறினார்.

வர்த்தக போரை குறிப்பிட்டுப் பேசிய வெய், அமெரிக்கா மோதிப் பார்க்க விரும்பினால் இறுதி வரை போரிட தயாராக இருப்பதாகவும், பேச்சுவார்த்தைக்கு வந்தால் அதற்கான கதவு திறக்கப்படும் என தெரிவித்தார்.

இதற்கிடையே அமெரிக்கா உடனான வர்த்தக போர் தொடர்பாக சீனா வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வர்த்தக போரை தொடங்கியது அமெரிக்கா தான் என்றும், அதன் காரணமாக உலக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா கொடுக்கும் எந்த வித அழுத்தங்களுக்கும் அடிபணிய மாட்டோம், கொள்கைகள்தான் முக்கியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் பயனுள்ள விதத்தில் பேச்சுவார்த்தை நடத்தவே சீனா விரும்புகிறது என கூறப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பச்சை குத்திய மகள்

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பெண் ஒருவர் பச்சை குத்திக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வசிக்கும் யுவெட்டே எனும் ...

%d bloggers like this: