Home / விளையாட்டுச் செய்திகள் / இருபதுக்கு 20 போட்டியில் உலக சாதனை படைத்த லசித் மாலிங்க

இருபதுக்கு 20 போட்டியில் உலக சாதனை படைத்த லசித் மாலிங்க

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 37 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

கண்டி – பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடியது.
இதற்கமைய இலங்கை அணி, இருபது ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றது.

அணி சார்பில் தனுஸ்க குணதிலக்க அதிகூடுதலாக 30 ஓட்டங்களையும், நிரோசன் திக்வெல்ல 24 ஓட்டங்களையும், லஹிரு மதுசாங்க 20 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி 16 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 88 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றது.

இந்த போட்டியில் இலங்கை அணியின் இருபதுக்கு 20 போட்டித் தொடரின் தலைவர் லசித் மாலிங்க,இருபதுக்கு 20 போட்டியில் உலக சாதனை படைத்தார்.

இதில் ஹெட்ரிக் உடன் முதல் நான்கு விக்கட்டுக்களையும் லசித் மாலிங்க அடுத்தடுத்து வீழ்த்தியதுடன், அடுத்த ஓவரில் மேலும் ஒரு விக்கட்டையும் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்த இருபதுக்கு 20 தொடரை நியூசிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான ரக்பி போட்டி இரத்து

ஹகிபிஸ் சூறாவளி காரணமாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான ரக்பி போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை குறித்த ...

%d bloggers like this: