Home / உள்நாட்டு செய்திகள் / இராணுவத்தின் வசமிருந்த சைவமங்கையர் கழகத்தின் கட்டடங்கள் விடுவிப்பு!!

இராணுவத்தின் வசமிருந்த சைவமங்கையர் கழகத்தின் கட்டடங்கள் விடுவிப்பு!!

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் படையினர் வசமிருந்த சைவமங்கையர் கழகத்தின் கட்டடங்கள் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளன.

மன்னார் பிரதேச செயலாளர் திருமதி கனகாம்பிகை சிவசம்புவால், சைவமங்கையர் கழகத்தின் தலைவி திருமதி யோகேஸ்வரா சிவாநந்தினியிடம்  இந்த விடுவிப்புப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டன.

போர் காரணமாக கழகக் கட்டிடம் மருத்துவ சேவை நிலையமாக இயங்கி வந்தது. 1990 தொடக்கம் 2009 வரை இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. 2009 நாட்டில் சுமூகமான நிலை ஏற்பட்ட நிலையில் சைவமங்கையர் கழக தலைவியால் ஜனாதிபதி மற்றும் வடமாகான ஆளுநரிடம் கழகக் கட்டடத்தை இராணுவத்திரிடமிருந்து பெற்றுத் தருமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்துள்ளார்.

ஜனாதிபதியின் தனியார் காணிகளை விடுவிக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக குறித்த இந்த கட்டடங்கள் விடுவிக்கப்பட்டன.

இவற்றை உத்தியோக பூர்வமாக பிரதேச செயலாளர் திருமதி கனகாம்பிகை சிவசம்பு கழக தலைவியிடம் ஒப்படைத்தார்.

இவ் நிகழ்வில் மன்னார் பிரதேச செயலகத்தின் காணி உத்தியோகத்தர் வசந்தன், கிராம அலுவலர்களின் பொறுப்பாளர் ராஜா, கிராம அலுவலர் சுந்தர சேனா மற்றும் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் முக்கிய உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

About அகமுகிலன்

x

Check Also

படைப்புழுவை கட்டுப்படுத்த மன்­னார் மாவட்டத்­தில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!!

மன்­னார் மாவட்டத்­தில் படைப்­பு­ழு­வைக் கட்­டுப்­ப­டுத்­து­தல் தொடர்­பான கருத்­த­ரங்கு  மாவட்ட செய­ல­கத்­தின் கேட்­போர் கூடத்­தில் மாவட்ட செய­லர் சி.ஏ. மோகன்­றாஸ் தலை­மை­யில் ...

%d bloggers like this: