Home / உள்நாட்டு செய்திகள் / இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான ஹெரோயின் கண்டுபிடிப்பு!!

இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான ஹெரோயின் கண்டுபிடிப்பு!!

சீதுவை – குஸ்வல வீதியில் ஹெரோயினுடன் நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் தங்கியிருந்த வீட்டில் இருந்து மேலும் ஹெரோயின் தொகையொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

521 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் , பின்னர் அவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் தங்கியிருந்த வீட்டில் சோதனையிடப்பட்டது.

இதன்போது ,  ஒரு கிலோ 507 கிராம் ஹெரோயின் தொகையும் , 12 கிலோ 776 கிராம் கஞ்சா போதைப்பொருளும் , 500 போதை மருந்துகளும் மற்றும் துப்பாக்கியொன்றுடன் 7 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறை ஊகட பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த ஹெரோயின் தொகையின் பெறுமதி இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

மரண தண்டனை தொடர்பில் மகிந்தவின் தெரிவித்துள்ள கருத்து..!!

மரண தண்டனை அவ்வாறே பேணப்படும் என்ற போதும், அது நடைமுறைப்படுத்தப்படக்கூடாது என்றும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எமது ...

%d bloggers like this: