Home / உள்நாட்டு செய்திகள் / இம் மாதம் (25) ஆம் திகதி கிழக்கில் சில காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை!!

இம் மாதம் (25) ஆம் திகதி கிழக்கில் சில காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை!!

இலங்கை இராணுவத்தின் பாவனையில் கிழக்கு பிரதேசத்தில் இருந்த காணிகள் இம் மாதம் (25) ஆம் திகதி விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

குச்சவேலி, கல்முனை மற்றும் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குரிய திரியாய், பெரியநிலாவெளி பிரதேசங்களிலுள்ள 5.05 ஏக்கர் காணிகள் 4 ஆவது கட்டமாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவைகளில் 3.5 ஏக்கர் காணி நிலப்பரப்புகள் தனியாருக்கு சொந்தமானதாகும். இந்த காணிகள் அம்பாறை மாவட்ட செயலாளர், அனைத்து மதகுரு தலைவர்கள், ஆளுனர், மாவட்ட செயலாளர்கள், கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் கிராம சேவையாளர்களின் முன்னிலையில் கையளிக்கப்படும்.

ஜனாதிபதி செயலகத்தின் எண்ணக் கருவிற்கமைய இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகவின் பணிப்புரைக்கமைய இந்த காணிகள் விடுவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகரது தலைமையில் இக்காணிகள் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

அனைத்து ரயில் சேவை நடவடிக்கைகளும் இடை நிறுத்தம்!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களினால் அனைத்து தொடருந்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தபடுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை இந்த ...

%d bloggers like this: