Home / உள்நாட்டு செய்திகள் / இம்ரான் உட்பட 15 குற்றவாளிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இம்ரான் உட்பட 15 குற்றவாளிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கடுமையான குற்றங்களில் ஈடுபட்ட காஞ்சிபனி இம்ரான் உட்பட 15 குற்றவாளிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வெலிகட மற்றும் தும்பர சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 குற்றவாளிகள் பலத்த பாதுகாப்பின் கீழ் பூசா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உளவுத்துறையின் அறிக்கையின் அடிப்படையிலேயே கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இடமாற்றம் செய்யப்பட்ட சந்தேக நபர்களில் சமந்த குமார அல்லது ‘வெல் சுதா’ மற்றும் முகமது நவ்ஃ பர் அல்லது ‘பொட்டா நவுஃபர்’ ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மேலும் பல குற்றவாளிகளும் எதிர்காலத்தில் பூசா சிறைக்கு மாற்றப்பட உள்ளனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

About Radio tamizha

x

Check Also

சர்வதேசமே உடனடியாக கோத்தாவை கைது செய்!”கோசங்களை எழுப்பி கவனயீர்ப்பு போராட்டம்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் நேற்று (22) ...

%d bloggers like this: