Home / தொழில்நுட்ப செய்திகள் / இன்ஸ்டாகிராம் பயனர்களின் கடவுச்சொற்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!!

இன்ஸ்டாகிராம் பயனர்களின் கடவுச்சொற்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!!

லட்சக்கணக்கிலான இன்ஸ்டாகிராம் பயனர்களின் கடவுச்சொற்கள், பார்க்கும் வடிவில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக பேஸ்புக் ஒப்புக் கொண்டுள்ளது.

பேஸ்புக்குக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராமை கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இதைப் பயன்படுத்துவோரின் பயனர் கடவுச்சொற்களின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. காரணம், நிறுவனத்தின் உள்ளக சர்வர்களில், பயனர்களின் கடவுச்சொற்கள், பார்க்கும் வடிவிலேயே சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக பேஸ்புக் ஒப்புக் கொண்டதே ஆகும்.

ஆனால் இவற்றை அந்நிறுவன ஊழியர்கள் மட்டுமே பார்த்திருக்க முடியும் என்றும், வெளிநபர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கடவுச்சொற்கள் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை என பேஸ்புக் கூறியுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE 

About அகமுகிலன்

x

Check Also

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதி!!

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள குரோம் இணைய உலாவியே இன்று உலகளவில் அதிக பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த உலாவியில் ...

%d bloggers like this: