Home / உள்நாட்டு செய்திகள் / இன்றைய வானிலை அறிக்கை!!

இன்றைய வானிலை அறிக்கை!!

கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

தேர்தல் ஆணையாளரின் அதிரடி அறிவிப்பு

தேர்தல் பிரச்சார காலத்தினுள் விகாரையில் அல்லது புனித தலத்தில்  தேர்தல் கூட்டத்தை நடத்தினால் அந்த வேட்பாளர் வெற்றிப்பெற்றாலும் அந்த வெற்றியை ...

%d bloggers like this: