Home / உள்நாட்டு செய்திகள் / இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

கொழும்பில் இருந்து காலி ஊடாக பொத்துவில் வரையான கடலுக்கு அப்பால் கடற்பிரதேசங்களில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டை சுற்றிய கடற்பகுதியில் காற்றின் வேகம் 25-35 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என இன்று அதிகாலை வௌியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தளத்திலிருந்து மன்னார் ,காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை , சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் மேல் மாகாணங்களில் பல தடவைகள் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

தேர்தல் ஆணையாளரின் அதிரடி அறிவிப்பு

தேர்தல் பிரச்சார காலத்தினுள் விகாரையில் அல்லது புனித தலத்தில்  தேர்தல் கூட்டத்தை நடத்தினால் அந்த வேட்பாளர் வெற்றிப்பெற்றாலும் அந்த வெற்றியை ...

%d bloggers like this: