Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி29/11/2017

இன்றைய நாள் எப்படி29/11/2017

ஹேவிளம்பி வருடம், கார்த்திகை மாதம் 13ம் திகதி, ரபியுல் அவ்வல் 9ம் திகதி,
29.11.2017 புதன்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 6:16 வரை;
அதன் பின் ஏகாதசி திதி நாளை அதிகாலை 5:32 வரை; உத்திரட்டாதி நட்சத்திரம் மதியம் 1:31 வரை; அதன் பின் ரேவதி நட்சத்திரம், சித்த, மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00 – 10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00 – 1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30 – 9:00 மணி
* குளிகை : காலை 10:30 – 12:00 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : பூரம், உத்திரம்.
பொது : ஏகாதசி விரதம், பெருமாள் வழிபாடு. சுபமுகூர்த்தநாள்.

மேஷம்:
நினைத்த காரியம் நிறைவேற தாமதமாகலாம. நம்பிக்கை அதிகரிக்க இஷ்ட தெய்வ வழிபாடு அவசியம். நண்பரின் உதவியால் தொழில் வியாபாரம் குறிப்பிட்ட இலக்கை அடையும். பணவரவால் சிக்கனம் அதிகரிக்கும். கவனக்குறைவால் சிறு பொருள் தவற நேரிடலாம்.

ரிஷபம் :
கடின உழைப்பினால் லட்சியம் நிறைவேறும். குடும்ப உறுப்பினரிடம் வாழ்த்து பெறுவீர்கள். தொழில் வியாபார வளர்ச்சி திருப்திகரமாகும். உபரி பணவருமானம் கிடைக்கும். குடும்பத்தினர் விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள்.

மிதுனம் :
பேச்சில் புத்திசாலித்தனமும் வசீகரமும் நிறைந்திருக்கும். தொழில், வியாபரம் வளர்ச்சி பெறும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். இயன்ற அளவில் அறப்பணி செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

கடகம் :
முக்கிய செயல்களில் கூடுதல் கவனம் வேண்டும். நண்பரின் ஆலோசனை பயன் தரும். தொழிலில் உற்பத்தி விற்பனை செழிக்க மாற்றங்கள் செய்வீர்கள். நிலுவைப்பணம் வந்து சேரும். அரசியல்வாதிகள் புதிய முயற்சி மேற்கொள்ள வேண்டாம்.

சிம்மம் :
நெருங்கியவர் மீது ஏற்படும் அதிருப்தியை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருக்கும் இடையூறுகளை உடனே சரிசெய்வது நல்லது. சேமிப்பு பணம் முக்கிய செல்வுக்கு பயன்படும். பெண்கள் பயன் அறிந்து பொருள் வாங்கவும்.

கன்னி:
சிரமமான பணியை எளிதில் நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை பெருகும். குடும்பத் தேவையை தாராளமாக பூர்த்தி செய்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும்.

துலாம்:
பிறர் நலன் குறித்த அக்கறை அதிகரிக்கும். மனதில் நிம்மதி ஏற்படும். தொழில் வியாபார வளர்ச்சி திட்டமிட்டபடி நிறைவேறும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். உறவினர்க்கு உதவ விரும்புவீர்கள்.

விருச்சிகம்:
பிறரின் பரிகாச பேச்சுகளை கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் சீராக கூடுதல் உழைப்பு அவசியம். தேவை உணர்ந்து செலவு செய்யவும். பெண்கள் வீடு, பண, ஆபரண விஷயத்தில் கவனமுடன் இருக்கவும்.

தனுசு:
எதிர்மறையாக பேசுகிறவரிடம் பெருந்தன்மையுடன் விலகுவது நல்லது. தொழில் வியாபாரம் சுமாரான அளவில் இயங்கும். கூடுதல் சிக்கனம் பின்பற்ற வேண்டும். மாணவர்கள் சாகச விளையாட்டில் ஈடுபட வேண்டாம்.

மகரம் :
மிகுந்த நம்பிக்கையுடன் பேசுவீர்கள். நற்குணம் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான மாற்றம் செய்வீர்கள். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

கும்பம் :
நண்பர்க்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழிலில் உருவாகிற, மாறுபட்ட சூழ்நிலையை சரி செய்வீர்கள். பணவரவு, அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். உணவுப் பொருள் தரம் அறிந்து உண்பது நல்லது.

மீனம் :
செயலில் நேர்த்தி நிறைந்திருக்கும். தொழில் வியாபாரம் வியத்தகு வளர்ச்சி பெறும். கூடுதல் லாபம் கிடைக்கும். உறவினரின் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பணியாளர்களுக்கு சலுகை அதிகரிக்கும்.

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 19/09/2019

இன்று! விகாரி வருடம், புரட்டாசி மாதம் 2ம் தேதி, மொகரம் 19ம் தேதி, 19.9.19 வியாழக்கிழமை தேய்பிறை, பஞ்சமி திதி ...

%d bloggers like this: