Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி28/11/2017

இன்றைய நாள் எப்படி28/11/2017

ஹேவிளம்பி வருடம், கார்த்திகை மாதம் 12ம் திகதி, ரபியுல் அவ்வல் 8ம் திகதி,
28.11.2017 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, நவமி திதி காலை 6:37 வரை;
அதன் பின் தசமி திதி, பூரட்டாதி நட்சத்திரம் மதியம் 1:26 வரை;
அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், மரண, அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00 – 4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00 – 10:30 மணி
* குளிகை : மதியம் 12:00 – 1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : மகம், பூரம்
பொது : முருகன், துர்க்கை வழிபாடு.

மேஷம் :
பணியினால் ஏற்படும் சஞ்சலம் தவிர்க்க இஷ்ட தெய்வ வழிபாடு செய்யவும். சட்டத் திட்டம் மதித்து நடக்க வேண்டும். தொழிலில் அளவான மூலதனம் போதும். பணவரவு சுமாராக் இருக்கும். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.

ரிஷபம் :
பெருந்தன்மையுடன் செயல்படுவீர்கள். எதிரிகளிடம் மதிப்பு உயரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

மிதுனம் :
உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் செழித்து திட்டமிட்ட இலக்கை எட்டும். பணவரவு திருப்திகரமாகும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

கடகம் :
நண்பருடன் வீண் விவாதம் வெண்டாம். தொழில் வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். சிறு அளவில் பணக்கடன் பெறும் சூழல் உருவாகும். உடல் ஆரோக்கியம் கருதி மருத்துவ சிகிச்சை மேற்கொள்வீர்கள்.

சிம்மம் :
எதிர்மறை எண்ணம் உள்ளவரிடம் விலகுவது நல்லது. தொழில் வியாபார இலக்கு கால தாமதமாக நிறைவேறும். அளவான பணவரவு கிடைக்கும். தவிர்க்க முடியாத வகையில் பணச்செலவு ஏற்படலாம். சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்கும்.

கன்னி:
எதிர்கால திட்டம் குறித்து சிந்திப்பீர்கள். நண்பர் வழியில் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பணப்பரிவரித்தனை திருப்திகரமாகும். பெண்கள் கலையம்ச பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம்:
நண்பரிடம் அன்பு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. தாராள பணவரவில் நிலுவை கடன் செலுத்துவீர்கள். உறவினர் வருகையால் நன்மை ஏற்படும். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும்.

விருச்சிகம்:
மனதில் ஏற்படும் குழப்பம் தீர்க்க வழிபாடு அவசியம். நண்பரின் ஆலோசனை நம்பிக்கை தரும். தொழிலில் நிலுவைப் பணியை உடனே நிறைவேற்றுவது அவசியம். தேவை அறிந்து செலவு செய்ய வேண்டும். உணவு விஷயத்தில் கவன்ம் தேவை.

தனுசு:
இடம், பொருள், ஏவல் கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரம் வளர புதிய நுட்பங்கள் தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். கண்களின் பாதுகாப்பில் கவனம் வேண்டும். பெண்கள் வீடு, ஆபரணத்தில் கவனமுடன் இருக்கவும்.

மகரம் :
சிறிய முயற்சியும் அதிக நன்மையை தரும். தொழில் வியாபாரத்தில் நினைத்த காரியம் நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். குழந்தைகளின் செயல் பெருமை தேடித்தரும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

கும்பம் :
தவறான விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லது. சுறுசுறுப்புடன் செயல்படுவது அவசியம். தொழிலில் உள்ள நிலுவைப் பணி படிப்படியாக நிறைவேறும். பணவரவு சுமாராக இருக்கும். ஓய்வு நேரத்தில் இசையை ரசிப்பது மனதுக்கு நன்மை.

மீனம் :
மிகுந்த உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை செழிக்கும். பணவரவில் லாப விகிதம் கூடும். உறவினர்க்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்த தேர்ச்சி பெறுவர்

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 05/11/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி, 5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: