Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி27/11/2017

இன்றைய நாள் எப்படி27/11/2017

ஹேவிளம்பி வருடம், கார்த்திகை மாதம் 11ம் திகதி, ரபியுல் அவ்வல் 7ம் திகதி,
27.11.2017 திங்கட்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி காலை 6:23 வரை;
அதன் பின் நவமி திதி, சதயம் நட்சத்திரம் மதியம் 1:12 வரை;
அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், சித்த, மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 6:00 – 7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30 – 9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30 – 12:00 மணி
* குளிகை : மதியம் 1:30 – 3:00 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : ஆயில்யம், மகம்
பொது : சிவன் கோயில்களில் சங்காபிஷேகம்

மேஷம் :
சுற்றத்தினரிடம் உறவு பலம் பெறும். தொழில் வியாபாரத்தில் புதிய பரிமாணம் ஏற்படும். ஆதாய பணவரவால் குடும்பத் தேவை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தினரிடம் ஒற்றுமை வளரும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

ரிஷபம் :
உறவினர்களின் நல்ல கருத்துக்களை மதிக்க வேண்டும். சமூக அந்தஸ்து அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். மனைவி, குழந்தைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

மிதுனம் :
அவசியமற்ற பணக்கடன் பெற வேண்டாம். தொழில், வியாபார நடைமுறையில் மாற்றம் செய்வது அவசியம். சேமிப்பு பணம் உரிய செலவுக்கு பயன்படும். சுற்றுப்புற சூழல் தொந்தரவினால் நித்திரை கெடலாம்.

கடகம்:
எதிரியிடம் விலகி இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணியை உடனே நிறைவேற்ற வேண்டும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் ஏற்படலாம். ஓய்வு நேரத்தில் இசையை ரசியுங்கள்.

சிம்மம் :
மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில் வியாபாரம் செழித்து வளர வாய்ப்பு உண்டு. பணப்பரிவர்த்தனை அதிகரிக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு இனிதாக நிறைவேறும். அரசியல்வாதிகளுக்கு இருந்த தொல்லை விலகும்.

கன்னி :
குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் திருப்திகரமாகும். பணப்பரிவரித்தனையில் முன்னேற்றம் ஏற்படும். சுப நிகழ்வில் கலந்து கொள்வீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாஙகுவர்.

துலாம்:
மன சஞ்சலம் நீங்க இஷ்ட தெய்வ வழிபாடு தேவை. தொழில், வியாபாரத்தின் இடையூறுகளை உடனே சரி செய்வது நல்லது. அளவான பணவரவு இருக்கும். பெண்கள் பயன் அறிந்து பொருள் வாங்கவும்.

விருச்சிகம்:
முக்கியமான பணி நிறைவேற்ற கூடுதல் உழைப்பு அவசியம். மனதில் பதற்றம் வேண்டாம். தொழில் வியாபாரம் சுமாரான அளவில் இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்த்தல் நல்லது. வெளியூர் பயணத்திட்டத்தில் மாற்றம் செய்வீர்கள்.

தனுசு:
சமூக சிந்தனை அதிகரிக்கும். அனைவரிடத்திலும் மதிப்பு உயரும். தொழில் வியாபாரம் செழித்து மறுமலர்ச்சி உருவாகும். பணவரவு திருப்திகரமாகும். இளமைக் கால நினைவுகளை அன்புக்குரியவரிடம் பகிர்ந்து கொள்வீர்கள்.

மகரம் :
நண்பருடன் கருத்து முரண்பாடு ஏற்படலாம். செயல்களில் பொறுமை வேண்டும். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். பணவரவை கவனமுடன் கையாள்வது நல்லது. உடல்நலம் உணர்ந்து விருந்தில் பங்கேற்கவும்.

கும்பம் :
அவமதித்தவரிடமும் பெருந்தன்மையுடன் பழகுவீர்கள். தொழில் வியாபார வளர்ச்சிப் பணி திட்டமிட்டபடி நிறைவேறும். கூடுதல் பணவரவு கிடைக்கும். வீட்டுக்கு தேவையான பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

மீனம் :
மாறுபட்ட நிகழ்வினால் ஏற்படும் மன வருத்தம் தவிர்க்க வழிபாடு செய்யுங்கள். குடும்ப உறுப்பினரின் ஆறுதல் நம்பிக்கை தரும். தொழில் வியாபார இலக்கு படிப்படியாக நிறைவேறும். முக்கிய செலவுக்கு சிறிய அளவில் பணக்கடன் பெறுவீர்கள்.

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 21/02/2020

இன்று! விகாரி வருடம், மாசி மாதம் 9ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 26ம் தேதி, 21.2.2020 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, திரயோதசி ...

%d bloggers like this: