Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி25/11/2017

இன்றைய நாள் எப்படி25/11/2017

ஹேவிளம்பி வருடம், கார்த்திகை மாதம் 9ம் திகதி, ரபியுல் அவ்வல் 5ம் திகதி, 25.11.2017 சனிக்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி நாளை அதிகாலை 5:58 வரை;

அதன் பின் அஷ்டமி திதி, திருவோணம் நட்சத்திரம் காலை 10:18 வரை; அதன் பின் அவிட்டம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00 -10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30 – 3:00 மணி
* குளிகை : காலை 6:00 – 7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : பூசம்
பொது : சனீஸ்வரர் வழிபாடு.

மேஷம்:
நினைத்த செயல் எளிதில் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்குவர். பிள்ளைகளால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும்.

ரிஷபம்:
எதிர்காலம் குறித்த நம்பிக்கை மேலோங்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். லாபம் உயரும். உறவினர் வருகையால் நன்மை உண்டாகும். பணியாளர்களுக்கு சலுகை பயன் எளிதில் கிடைக்கும்.

மிதுனம்:
அறிமுகம் இல்லாதவரிடம் கவனமுடன் பேசவும். தொழில் வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாப்பது நல்லது. லாபம் சுமாராக இருக்கும். வாகனப் போக்குவரத்தில் மித வேகம் பின்பற்றவும். பெண்கள் நகை, பண விஷயத்தில் விழிப்புடன் இருக்கவும்.

கடகம் :
கிடப்பில் இருந்த திட்டம் நிறைவேறும். தொழில் வள்ர்ச்சிக்காக கடினமாக உழைப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். உறவினர் இல்ல சுப நிகழ்வில் பங்கேற்பீர்கள். அரசு வகையில் நன்மை உண்டாகும்.

சிம்மம்:
பலரும் பாராட்டும் வகையில் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க புதிய வாய்ப்பு கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். காணாமல் தேடிய பொருள் கைவந்து சேரும். உறவினரின் தேவையறிந்து உதவுவீர்கள்.

கன்னி:
யாரிடமும் வீண் விவாதம் வேண்டாம். தொழில் வியாபார நடைமுறை மந்தகதியில் இயங்கும். லாபம் சுமார். பெண்களுக்கு வீட்டுச் செலவில் சிக்கனம் தேவை. வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளவும். உடல்நலனில் அக்கறை தேவை.

துலாம்:
முக்கிய பணி நிறைவேற தாமதம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் தடை குறுக்கிடலாம். சுமாரான ஆதாயம் கிடைக்கும். பணியாளர் பாதுகாப்பு விதிகளை கவனமுடன் பின்பற்றவும். பெண்கள் வீட்டுச் செலவை சமாளிக்க திணறுவர்.

விருச்சிகம்:
மற்றவர் பாராட்டும் விதத்தில் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும். வருமானம் உயரும். குழந்தைகள் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். உறவினர் வழியில் இருந்த பிரச்னை தீரும். பெண்களுக்கு தாய் வீட்டாரின் உதவி கிடைக்கும்.

தனுசு:
யாருக்கும் சங்கடம் தராமல் பேசுவது நல்லது. தொழில் சார்ந்த இடையூறுகளை சந்திக்க நேரிடலாம். லாபம் சுமார். பணியாளர்கள் சக ஊழியர்களால் பணிச்சுமைக்கு ஆளாகலாம். திடீர் செலவால் சேமிப்பு கரையும். வாகன பயணத்தில் கவனம் தேவை.

மகரம்:
சமூக அந்தஸ்த்து உயரும். தொழில் வியாபாரத்தில் வருமானம் உயரும். நிலுவைப் பணம் வசூலாகும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். இயன்ற அளவில் உறவினருக்கு உதவுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கும்பம்:
தன்னம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் சராசரியாக இருக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் உருவாகும்.

பெண்கள் பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவர். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.

மீனம்:
அறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். தொழில் வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை அதிகரிக்க கூடுதல் உழைப்பு தேவை.

மிதமான லாபம் கிடைக்கும். பெண்கள் நகை, பணம் கவனமுடன் கையாளவும். உறவினர் உதவி செய்ய முன்வருவர்.

 

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 02/08/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 18ம் தேதி, துல்ஹஜ் 11ம் தேதி, 2.8.2020 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி ...