Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி22/11/2017

இன்றைய நாள் எப்படி22/11/2017

ஹேவிளம்பி வருடம், கார்த்திகை மாதம் 6ம் திகதி, ரபியுல் அவ்வல் 2ம் திகதி,
22.11.2017 புதன்கிழமை, வளர்பிறை, சதுர்த்தி திதி இரவு 1:21 வரை;
அதன் பின் பஞ்சமி திதி, பூராடம் நட்சத்திரம் காலை 6:07 வரை;
அதன் பின் உத்திராடம் நட்சத்திரம், அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00 – 10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00 – 1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30 – 9:00 மணி
* குளிகை : காலை 10:30 – 12:00 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்
பொது : விநாயகர் வழிபாடு.

மேஷம்:
முக்கியமான பணியை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் தடைகள் குறுக்கிடலாம். லாபம் சுமாராக இருக்கும். வருமானம் மிதமாக இருக்கும். வாகன போக்குவரத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

ரிஷபம்:
நண்பரின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழிலில் நவீன மாற்றம் செய்வீர்கள். லாபம் சீராக இருக்கும். பிள்ளைகளின் வழியில் செலவு ஏற்படலாம். மனைவி வழி உறவினரால் நன்மை உண்டாகும்.

மிதுனம் :
இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் சிறந்து விளங்கும். ஆதாயம் அதிகரிக்கும். தாயின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

கடகம்:
உழைப்பின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். வருமானம் பெருகும். பெண்கள் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவர். அரசு வகையில் ஆதாயம் கிடைக்க வாய்ப்புண்டு.

சிம்மம்:
குடும்ப பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். உடல்நலம் பாதுகாக்க ஓய்வு அவசியம். உறவினர் வகையில் திடீர் செலவு ஏற்படும்.

கன்னி:
மன குழப்பம் தீர வழிபாட்டில் ஈடுபடுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சுமார். ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றுவது ந்லலது.

துலாம்:
வெகுநாள் குழப்பம் சரியாகும். வாழ்வில் முன்னேற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளர அதிகம் உழைப்பீர்கள். லாபம் உயரும். குழந்தைகளின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்:
அக்கம் பக்கத்தினரிடம் நெருக்கம் வேண்டாம். தொழில், வியாபாரத்தில் பணவரவு சராசரியாக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்கள் பணம் இரவல் கொடுப்பது கூடாது. குழந்தைகள் நற்செயலில் ஈடுபடுவர்.

தனுசு:
அன்றாட பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகும். லாபம் திருப்தியளிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். குடும்பத்துடன் சுபநிகழ்ச்சிகளில பங்கேற்பீர்கள்.

மகரம்:
திட்டமிட்ட செயல் நிறைவேற கவனம் தேவை. குடும்பத்தினரின் ஆதரவால் நன்மை உண்டாகும். சக தொழில் சார்ந்தவரிடம் வீண் விவாதம் வேண்டாம். பணவரவு சுமாராக இருக்கும். வாகன பயணத்தில் மித வேகம் பின்பற்றவும்.

கும்பம்:
உற்சாகத்துடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இலக்கு பூர்த்தியாகும். உபரி பணவரவால் கடன் சுமை குறையும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். பெண்களுக்கு எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

மீனம்:
நண்பரால் எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். வருமானம் பெருகும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர். வாகனபயணத்தால் நன்மை காண்பீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 09/10/2019

இன்று! விகாரி வருடம், புரட்டாசி மாதம் 22ம் தேதி, ஸபர் 9ம் தேதி, 9.10.19 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: