Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி20/11/2017

இன்றைய நாள் எப்படி20/11/2017

ஹேவிளம்பி வருடம், கார்த்திகை மாதம் 4ம் தேதி, ஸபர் 30ம் தேதி,
20.11.2017 திங்கட்கிழமை, வளர்பிறை, துவிதியை திதி இரவு 9:11 வரை;
அதன் பின் திரிதியை திதி, கேட்டை நட்சத்திரம் இரவு 12:57 வரை;
அதன் பின் மூலம் நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 6:00 – 7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30 – 9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30 – 12:00 மணி
* குளிகை : மதியம் 1:30 – 3:00 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : பரணி, கார்த்திகை
பொது : சந்திர தரிசனம், சிவன்கோயில்களில் சங்காபிஷேகம், கரிநாள்.

மேஷம்:
எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மிதமான வருமானம் இருக்கும். பணியாளர்கள் பணிச்சமையால் அவதிப்படுவர். பெணகள் கணவருடன் விவாதம் செய்ய வேண்டாம்.

ரிஷபம்:
அன்றாடப் பணிகளில் நேர்த்தியுடன் செயலாற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். குடும்ப பிரச்சனையில் சாதகமான தீர்வு கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.

மிதுனம்:
எதிர்பார்த்த செயல் எளிதாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சேமிக்கும் விதத்தில் வருமானம் கிடைக்கும். பெண்களுக்கு தாய்வீட்டாரின் உதவி கிடைக்கும். அரசு வகையில் நன்மை எதிர்பார்க்கலாம்.

கடகம்:
குடும்பத்தினரின் தேவையறிந்து உதவுவீர்கள். தொழில் வியாபாரத்தில் தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறுவர். ஒவ்வாத உணவை தவிர்த்தல் நல்லது.

சிம்மம்:
முக்கிய செயலை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பெண்களுக்கு வீட்டுச் செலவில் கவனம் தேவை. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். நண்பரால் உதவி கிடைக்கும்.

கன்னி :
அன்றாடப் பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் மனதில் நம்பிக்கை மேலோங்கும். வருமானம் உயரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும்.

துலாம்:
முக்கிய செயல் நிறைவேற தாமதமாகலாம். தொழில் வியாபாரம் செழிக்க நண்பரின் ஆலோசனை உதவும். லாபம் சீராக இருக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர். பி்ளளைகளின் செயல்பாடு ஆறுதல் அளிக்கும்.

விருச்சிகம்:
நண்பரின் ஆலோசனையால் நன்மை காண்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இலக்கு எளிதாக நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும்.

தனுசு:
பேச்சில் நிதானம் பின்பற்றுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மிதமான பணவரவு கிடைக்கும். பயணம் பயனறிந்து மேற்கொள்ளவும். பெண்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுவர். பெண்களுக்கு தாய்வீட்டாரின் ஆதரவு பெறுவர்.

மகரம்:
எதிரிகளால் இருந்த சிக்கல் தீரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். தாராள பணவரவு இருக்கும். குடும்ப தேவை திருப்திகரமாக நிறைவேறும். பிள்ளைகள் கல்வி, வேலைவாய்பபில் முன்னேற்றம் காண்பர்.

கும்பம்:
உறவினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சேமிக்கும் விதத்தில் தாராள வருமானம் வரும். காணாமல் தேடிய பொருள் கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் சேரும்.

மீனம்:
புதியவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு தேவை. பணவரவு சுமாராக இருக்கும். திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். வீடு, வாகன வகையில் திடீர் செலவு உண்டாகும்.

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 09/10/2019

இன்று! விகாரி வருடம், புரட்டாசி மாதம் 22ம் தேதி, ஸபர் 9ம் தேதி, 9.10.19 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: