Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி

இன்றைய நாள் எப்படி

ஆகஸ்ட் 31,2020
இன்று!
சார்வரி வருடம், ஆவணி மாதம் 15ம் தேதி, மொகரம் 11ம் தேதி,
31.8.2020 திங்கட்கிழமை, தேய்பிறை, திரயோதசி திதி காலை 9:52 வரை,
அதன்பின் சதுர்த்தசி திதி, திருவோணம் நட்சத்திரம் மாலை 4:46 வரை,
அதன்பின் அவிட்டம் நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
சூலம் : கிழக்கு

* பரிகாரம் : தயிர்
* சந்திராஷ்டமம் : திருவாதிரை, புனர்பூசம்
* பொது : முகூர்த்த நாள், ஓணம், சிரவண விரதம்

 

மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

மிதுனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியா வசிய செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்று கொள்வீர்கள். பொறுமை தேவைப்படும் நாள்.

கடகம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். தாயாரின் உடல் நிலை சீராகும். கல்யாண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தெய்வ அனுகூலம் ஏற்படும் நாள்.

துலாம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. நன்மை கிட்டும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். நினைத்ததை முடிக்கும் நாள்.

தனுசு: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். நேர்மறை எண்ணம் பிறக்கும் . நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புதுதொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. திடீர் பயணங்கள் இருக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

மீனம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி

அக்டோபர் 01,2020 இன்று! சார்வரி வருடம், புரட்டாசி மாதம் 15ம் தேதி, ஸபர் 13ம் தேதி, 1.10.2020, வியாழக்கிழமை, தேய்பிறை, ...