Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 31/12/2018

இன்றைய நாள் எப்படி 31/12/2018

இன்று!
விளம்பி வருடம், மார்கழி மாதம் 16 ம் தேதி, ரபியுல் ஆகிர் 23ம் தேதி,
31.12.18, திங்கட்கிழமை தேய்பிறை, தசமி திதி நாளை அதிகாலை 5:02 வரை;
அதன்பின் ஏகாதசி திதி, சித்திரை நட்சத்திரம் மதியம் 12:38 வரை;
அதன்பின் சுவாதி நட்சத்திரம், சித்த–அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 6:00–7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30–9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30–12:00 மணி
* குளிகை : மதியம் 1:30–3:00 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி, ரேவதி
பொது : நரசிம்மர், சிவன் வழிபாடு.

மேஷம் : செயல்களில் தைரியம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். உற்பத்தி, விற்பனை செழிக்கும். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம் : எந்த செயலையும் சவாலாக அணுகுவீர்கள். கடந்த காலத்தில் திகைப்பு தந்த பணி, எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாகும். பணியாளர்களுக்கு பாராட்டு வெகுமதி கிடைக்கும்.

மிதுனம் : இடையூறு செய்பவரை, அறிந்து கொள்வீர்கள். மன்னித்து சொந்தப்பணியில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சிறு அளவில் போட்டி இருக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் ஏற்படலாம். சராசரி பணவரவு கிடைக்கும்.

கடகம் : பணிகளில் சிரமம் உருவாகலாம். கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். பணப் பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு ஆரோக்கியம் தரும்.

சிம்மம் : பேச்சில் அன்பும், பண்பும் மிகுந்திருக்கும். நண்பர், உறவினர்கள் மதிப்புடன் நடத்துவர். தொழில், வியாபாரம் செழிக்க முழு முயற்சியுடன் பணிபுரிவீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். பெண்கள் பொன், பொருள் சேர்க்கை பெற நல்யோகம் உண்டு.

கன்னி : செயல்களில் கவனச் சிதறல் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை நன்மை பெற உதவும். தொழில் வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளலாம்.

துலாம் : பேச்சு, செயலில் விவேகம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் சிறந்து, புதிய வளர்ச்சி பரிமாணம் ஏற்படும். பணவரவில் லாப விகிதம் கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பிள்ளைகளின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

விருச்சிகம் : சிலர் குறை சொல்ல காத்திருப்பர். செயல்களில் சுறுசுறுப்பு பின்பற்ற வேண்டும். தொழில், வியாபாரம் சுமாராக இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். ஓய்வு நேரத்தில், இசைப்பாடலை ரசிப்பதால் புத்துணர்வு பிறக்கும்.

தனுசு : உதவி பெற்றவர் நன்றி பாராட்டுவார். தொழில் வியாபாரம் செழிக்க அதிகம் பணிபுரிவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப்பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி வளரும்.

மகரம் : நல்லோரின் நட்பு எளிதாக கிடைக்கும். புதிய திட்டம் குறித்து பேசுவீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும். ஆதாய பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

கும்பம் : சிலர் பொறாமையினால் கேலி, கிண்டல் செய்வர். அவர்களிடம் விலகிச் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேற தாமதமாகலாம். அளவான பணவரவு கிடைக்கும். எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். மீனம் : சொந்த பிரச்னை பற்றி பிறரிடம் சொல்ல வேண்டாம். கஷ்ட சூழ்நிலை மெல்ல மெல்ல சரியாகும். தொழில் வியாபாரத்தில் அனுகூலம் பாதுகாக்க வேண்டும். சுமாரான அளவில் பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | மனிதனை ஆட்சி செய்யும் நவக்கிரகங்கள்

கிரகம் என்னும் சமஸ்கிருத சொல்லுக்குப் பற்றி இழுப்பது என்று பொருள். ஒன்பது கிரகங்களும் வான்வெளி மண்டலத்தில் தனித்தனியே திகழ்கிறது. இரும்பு ...

%d bloggers like this: