Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 31/10/2019

இன்றைய நாள் எப்படி 31/10/2019

இன்று!
விகாரி வருடம், ஐப்பசி மாதம் 14ம் தேதி, ரபியுல் அவ்வல் 2ம் தேதி,
31.10.19 வியாழக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தி திதி, நாளை அதிகாலை 5:07 வரை,
அதன்பின் பஞ்சமி திதி, கேட்டை நட்சத்திரம் இரவு 1:57 வரை;
அதன்பின் மூலம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10 : 30 – 12 : 00 மணி
ராகு காலம் : பகல் 1 : 30 – 3 : 00 மணி
எமகண்டம் : காலை 6 : 00 – 7 : 30 மணி
குளிகை : காலை 9 : 00 – 10 : 30 மணி
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : கார்த்திகை
பொது : சதுர்த்தி விரதம், விநாயகர், தட்சிணாமூர்த்தி வழிபாடு.

 

மேஷம் : உருவாகிற முக்கிய பணியை தாமதமின்றி நிறைவேற்றுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட தன்மை இருக்கும். குறைந்த அளவில் பணம் கிடைக்கும். பிறருக்காக எவ்வித பொறுப்பும் ஏற்க வேண்டாம்.

ரிஷபம் : உங்கள் சிந்தனையில் புதிய மாற்றம் ஏற்படும். செயல்கள் நிறைவேற நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் அபிவிருத்தியாகும். எதிர்பார்த்த பணவரவு திருப்திகரமாகும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள்.

மிதுனம் : எவரிடமும் சாந்த குணத்துடன் பழகுவீர்கள். சமூகத்தில் கூடுதல் அந்தஸ்து கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிக்க புதியவர்களின் உதவி வந்து சேரும். பணவரவில் திருப்திகரமான நிலை உண்டு. வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள்.

கடகம்: உங்களை சிலர் ஏளனமாக பேசுவர். எந்த செயலையும் பரிசீலித்து செய்யவும். தொழில், வியாபாரத்தில் சிறு அளவிலான குறுக்கீடு வரலாம். சேமிப்பு பணம் செலவாகும். பெண்கள், ஒவ்வாத அழகு சாதன பொருள் பயன்படுத்த வேண்டாம்.

சிம்மம் : பேச்சை குறைத்து பணியில் ஆர்வம் கொள்வது நல்லது. தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். முக்கிய செலவுகளுக்கு தேவையான பண வரவு கிடைக்கும். வெளியூர் பயண திட்டத்தில் மாறுதல் செய்வீர்கள்.

கன்னி : நண்பர்களின் அன்பு, பாசம், மனதில் உத்வேகம் தரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும் பணவரவும் கூடும். விரும்பிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணம் எதிர்பார்ப்பை நிறைவேற்றும்.

துலாம்: உங்கள் செயல்களில் தடுமாற்றம் ஏற்படலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ண கூடாது. சீரான ஓய்வு உடல் நலம் பாதுகாக்க உதவும்.

விருச்சிகம்: நண்பரின் உதவி உற்சாகம் தரும். முக்கியமான விஷயத்தில் சுமூக தீர்வு வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும். உபரி பண வருமானம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் பெறுவர்.

தனுசு: உங்கள் மனதில் புதிய ஞானம் பிறக்கும். சமயோசிதமாக பணிபுரிவீர்கள். தொழில், வியாபார இலக்கு மெல்ல மெல்ல நிறைவேறும்.பணவரவு சிக்கன செலவுக்கு மட்டுமே பயன்படும்.

மகரம் : சொந்த பணியில் ஈடுபடுவதால் மனதில் நிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவீர்கள். லாப விகிதம் சராசரி அளவில் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள்.

கும்பம் : முயற்சிக்குரிய பலன் முழுமையாக வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் திருப்திகர நிலை உருவாகும். ஆதாய பண வரவு பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வு உண்டு. நண்பருடன் சுற்றுலா பயண திட்டம் உருவாகும்.

மீனம் : உறவினரின் செயலை விமர்சிக்க கூடாது. தொழில், வியாபாரத்தில் நிறைவேற்ற வேண்டிய பணி அதிகரிக்கும். கொஞ்சம் பணக் கடன் பெறுவீர்கள். உணவு தரம் அறிந்து உண்ணவும். இஷ்ட தெய்வ வழிபாடு செய்வீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 05/11/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி, 5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: