Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 31/07/2019

இன்றைய நாள் எப்படி 31/07/2019

மேஷம்: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சிக்காக கூடுதல் பணி மேற்கொள்வீர்கள். பணவரவு திருப்தியளிக்கும். பெண்கள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவர். உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடும்.

ரிஷபம்: மனதில் நிம்மதி நிலைக்கும். தொழில் வியாபார வளர்ச்சியால் வருமானம் உயரும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்களால் குடும்பத்தில் ஒற்றுமை வளரும். அரசு வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம்.

மிதுனம்: பெற்றோரின் அறிவுரையை ஏற்பது நல்லது. பணியில் பொறுப்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாப்பது நல்லது. பெண்களுக்கு செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். உடல்நலனில் அக்கறை தேவை.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடகம்: பெருந்தன்மை மிக்கவராக விளங்குவீர்கள். நற்செயலில் ஈடுபட்டு சமூகத்தில் வரவேற்பு பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

சிம்மம்: செயலில் திறமை வெளிப்படும். அலைச்சல் தந்த வேலை ஆதாயம் தருவதாக மாறும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.

கன்னி: மாறுபட்ட சூழ்நிலையை சந்திக்க நேரிடலாம். நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு மன அமைதிக்கு வழி வகுக்கும்.

துலாம்: திட்டமிட்டு செயல்பட்டு முன்னேறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர புதிய வாய்ப்பு உருவாகும். பணியாளர்கள் நிர்வாகத்தின் பாராட்டைப் பெறுவர். பிறர் பார்க்கும்படி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

விருச்சிகம்: செயல்களில் அதிக நேர்த்தி நிறைந்திருக்கும். அரசு தொடர்பான உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். ஆதாயம் அதிகரிக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

தனுசு: சிலர் சுயநலத்துடன் உங்களிடம் பழகலாம். விழிப்புடன் விலகுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ப ஆதாயம் கிடைக்கும். பெண்கள் ஆடம்பர எண்ணத்துடன் செயல்படுவர். திடீர் பயணம் செல்ல நேரிடலாம். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவர்.

மகரம்: இஷ்ட தெய்வ அருளால் நன்மை உருவாகும். அன்றாட வாழ்வில் புத்துணர்வுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி வியப்பூட்டும் விதத்தில் இருக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். மனைவி விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்: திட்டமிட்ட செயல் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் உள்ள தடைகளை முறியடிப்பீர்கள். லாபம் அதிகரிக்கும். உடல்நலனில் அக்கறை தேவை. பணியாளர்கள் நிர்வாகத்தினரின் பாராட்டைப் பெறுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

மீனம்: புதிய முயற்சி முழு அளவில் வெற்றியளிக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். ஆதாயம் கூடும். குடும்பத் தேவைகளை தாராள செலவில் நிறைவேற்றுவீர்கள். நண்பரைச் சந்திக்கும் வாய்ப்பு உருவாகும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 09/10/2019

இன்று! விகாரி வருடம், புரட்டாசி மாதம் 22ம் தேதி, ஸபர் 9ம் தேதி, 9.10.19 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: