Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 30/11/2019

இன்றைய நாள் எப்படி 30/11/2019

இன்று!
விகாரி வருடம், கார்த்திகை மாதம் 14ம் தேதி, ரபியுல் ஆகிர் 2ம் தேதி,
30.11.19 சனிக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தி திதி இரவு 8:22 வரை;
அதன்பின் பஞ்சமி திதி, பூராடம் நட்சத்திரம் காலை 10:54 வரை,
அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
ராகு காலம் : காலை 9:00 – 10:30 மணி
எமகண்டம் : பகல் 1:30 – 3:00 மணி
குளிகை : காலை 6:00 – 7:30 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்
பொது : சதுர்த்தி விரதம் விநாயகர், சனீஸ்வரர் வழிபாடு.

 

மேஷம்: நண்பர்களின் உதவி மனதில் ஊக்கம் தரும். தொழில், வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உபரி பண வருமானம் கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.
ரிஷபம் : உங்கள் செயல்களில் தடுமாற்றம் ஏற்படலாம். கடினமான பணிகளில் பாதுகாப்பு வேண்டும். தொழிலில் இலக்கு நிறைவேற கூடுதல் அவகாசம் தேவைப்படும். கொஞ்சம் பண கடன் பெற நேரிடலாம். மனைவி உதவிகரமாக நடந்து கொள்வார்.
மிதுனம் : உங்கள் தேவையை நிறைவேற்றுவதில் மற்றவரின் அதிருப்தி வராதபடி செயல்படவும். தொழிலில் வளர்ச்சி பெற கால அவகாசம் தேவைப்படும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். புத்திரரின் திறமை மிகுந்த செயல் மனதை மகிழ்விக்கும்.

கடகம்: உங்கள் மனதில் தெய்வீக சிந்தனை வளரும். அறிமுகம் இல்லாதவருக்கும் தகுந்த உதவி புரிவீர்கள். தொழில், வியாபாரம் சிறந்து வாழ்க்கை தரம் உயரும். சராசரி பண வரவுடன் நிலுவை பணம் வசூலாகும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும்.

சிம்மம்: முக்கியஸ்தரின் உதவி எதிர்பாராமல் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய சாதனை முன்னேற்றம் உண்டு. கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள். மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள்.
கன்னி: சிலர் உங்களுக்கு உதவிட முன் வருவர். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். ஆதாய பண வரவு உண்டு. பொருட்களை கவனமுடன் பயன்படுத்தவும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும்.

துலாம்: முன் யோசனையுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணி உருவாகும். தவிர்க்க இயலாத வகையில் பண செலவு ஏற்படும். சுற்று சூழ்நிலை தொந்தரவால் நித்திரை தாமதமாகும். மாணவர்கள் படிப்பில் அதிக பயிற்சி வேண்டும்.

விருச்சிகம்: மனதில் புதிய உத்வேகம் பிறக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும் .உபரி பண வருமானம் கிடைக்கும். முக்கிய வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.
தனுசு: வழக்கத்திற்கு மாறான பணி தொந்தரவு தரலாம். மனதை செம்மைப்படுத்தி கொள்வது அவசியம். தொழில், வியாபாரம் சீராக அதிக உழைப்பு தேவைப்படும். பண வரவை சிக்கனமாக செலவு செய்வீர்கள். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.
மகரம் : புதிய விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். அனுபவம் இனிதாக அமையும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெற சில மாற்றம் செய்வீர்கள். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.
கும்பம் : எதிர் கால நலன்களை கவனத்தில் கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர் உதவுவர். தொழிலில் கூடுதல் உழைப்பால் உற்பத்தி, விற்பனை சீராகும். சத்தான உணவு உண்பதால் ஆரோக்கியம் மேம்படும். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும்.
மீனம் : உங்கள் எண்ணமும் செயலும் உற்சாகம் பெறும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு சிறப்பாக நிறைவேறும். பண வரவும் நன்மையும் அதிகரிக்கும். குடும்ப தேவை பூர்த்தியாகும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 01/12/2019

இன்று! விகாரி வருடம், கார்த்திகை மாதம் 15ம் தேதி, ரபியுல் ஆகிர் 3ம் தேதி, 1.12.19 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, பஞ்சமி ...

%d bloggers like this: