Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 30/10/2019

இன்றைய நாள் எப்படி 30/10/2019

இன்று!
விகாரி வருடம், ஐப்பசி மாதம் 13ம் தேதி, ரபியுல் அவ்வல் 1ம் தேதி,
30.10.19 புதன்கிழமை, வளர்பிறை, துவிதியை திதி காலை 6:54 வரை;
அதன்பின் திரிதியை திதி, நாளை அதிகாலை 4:49 வரை; அனுஷம் நட்சத்திரம் இரவு 2:00 வரை,
அதன்பின் கேட்டை நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9 : 00 – 10 : 30 மணி
ராகு காலம் : பகல் 12 : 00 – 1 : 30 மணி
எமகண்டம் : காலை 7 : 30 – 9 : 00 மணி
குளிகை : காலை 10 : 30 – 12 : 00 மணி
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : பரணி
பொது : பெருமாள் வழிபாடு, முகூர்த்தநாள்.

 

மேஷம் : சிலர் உங்களிடம் பொறாமையுடன் பேசுவர். விலகுவதால் மன அமைதியை பாதுகாக்கலாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். குடும்பத்தில் ஒற்றுமை சீராக இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

ரிஷபம் : இனிய நிகழ்வுகளை எண்ணி மகிழ்வீர்கள். புதியவர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிக்க சிறப்பாக பணி புரிவீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

மிதுனம் : அன்புக்குரியவர் நல்ல ஆலோசனை வழங்குவார். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி இனிதாக நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். சுப செய்தி வந்து சேரும்.

கடகம்: உங்களின் நல்ல செயலை சிலர் பரிகாசம் செய்வர். பணியில் தகுந்த அக்கறை கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாரான அளவில் இருக்கும். பண வரவை சிக்கனமாக செலவு செய்வீர்கள். சீரான ஓய்வு உடல் நலம் காக்க உதவும்.

சிம்மம் : முக்கியமான செயலை அடுத்தவரிடம் தர வேண்டாம். தொழிலில் வளர்ச்சி பெற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவீர்கள். பண செலவுகளில் சிக்கனம் நல்லது. வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும்.

கன்னி : உங்கள் மனதில் இருந்த குழப்பம் தீரும். செயல்களில் அளப்பரிய நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். பண வரவில் லாப விகிதம் அதிகரிக்கும். முக்கியமான வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள்.

துலாம்: உறவினர்களின் நல்ல வழிகாட்டுதல் நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். அதிக பயன் தராத பொருட்கள் விலைக்கு வாங்க வேண்டாம். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை உதவும்.

விருச்சிகம்: உங்களின் தனி திறமையினால் அளப்பரிய நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் திருப்திகரமான வளர்ச்சி ஏற்படும். உபரி பண வரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். பணியாளர்களுக்கு பாராட்டு, வெகுமதி கிடைக்கும்.

தனுசு: எதிர் கால நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் பெற சில மாற்றம் செய்வீர்கள். சுமாரான பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்ற வேண்டும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

மகரம் : அனுகூல சூழ்நிலை உருவாகும். தொழில், வியாபாரம் செழித்து திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். ஏழ்மையானவர்களுக்கு உதவுவீர்கள். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசித்து மகிழ்வீர்கள்.

கும்பம் : சமூக சிந்தனையுடன் பணி புரிவீர்கள். நண்பர், உறவினர் பாராட்டுவர். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். தாராள பண வரவில் குடும்ப தேவை பூர்த்தியாகும். உடல் நல ஆரோக்கியம் சீராகும்.

மீனம் : மனதில் இனம் புரியாத பதற்றம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. செலவுக்கு பணக் கடன் பெறுகிற சூழ்நிலை உண்டு. பொருட்களை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 05/11/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி, 5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: