Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 30/10/2018

இன்றைய நாள் எப்படி 30/10/2018

இன்று!

விளம்பி வருடம், ஐப்பசி மாதம் 13ம் தேதி, ஸபர் 20ம் தேதி,
30.10.18 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, சஷ்டி திதி மதியம் 2:29 வரை;
அதன்பின் சப்தமி திதி, திருவாதிரை நட்சத்திரம் காலை 6:58 வரை;
அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம் நாளை அதிகாலை 4:32 வரை; மரண–சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி
* குளிகை : மதியம் 12:00–1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : மூலம்
பொது : துர்க்கை வழிபாடு.

மேஷம்: மனதில் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாத்தில் லாபம் அதிகரிக்கும். வழக்கு, விவகாரத்தில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

ரிஷபம்: பெற்றோரின் ஆலோசனை நன்மையளிக்கும். தொழில் வளர்ச்சி பெற கூடுதலாக பணிபுரிவீர்கள். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். சொத்து, ஆவணம் பிறர் பொறுப்பில் தரக் கூடாது.

மிதுனம்: அவமதித்து பேசியவரும் அன்பு பாராட்டுவர். தொழில் வளர்ச்சியால் புதிய சாதனை ஏற்படும். கூடுதல் பணவரவால் சேமிப்பு அதிகரிக்கும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பெண்கள் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர்.

கடகம்: எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகலாம். தன்னம்பிக்கையுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் மறைமுகப்போட்டி குறுக்கிடலாம். திடீர் செலவால் சேமிப்பு கரையும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.

சிம்மம்: இஷ்ட தெய்வ அருள் துணைநிற்கும். சிறு செயலையும் நேர்த்தியாக செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். லாபம் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

கன்னி: உறவினர் மத்தியில் நற்பெயர் காண்பீர்கள். தொழிலில் வளர்ச்சிப்பணி இனிதாக நிறைவேறும். கூடுதல் லாபம் சேமிப்பாக மாறும். குடும்பத்தின் தேவை குறைவின்றி பூர்த்தியாகும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். பெண்கள் குடும்பநலனில் கவனம் செலுத்துவர்.

துலாம்: வீண்பேச்சு பேசுபவர்களிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் சிரமப்படுவர். வழிபாடு, தியானம் மனஅமைதி பெற உதவும்.

விருச்சிகம்: முக்கிய பணியை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாக்கவும். லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் குடும்பச் செலவை சமாளிக்க திண்டாடுவர். வெளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் உண்டாகும்.

தனுசு: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தினர் ஆதரவால் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் தொடர்பு பலம் பெறும். நிலுவைப்பணம் வசூலாகும். நீண்டநாள் தேடிய பொருள் புதிய முயற்சியால் கைக்கு வந்து சேரும்.

மகரம்: ஆன்மிக சிந்தனை மேலோங்கும். பலநாள் திட்டமிட்ட செயல் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு உயரும். குடும்பத்தில் சுபவிஷயம் குறித்த பேச்சு நடக்கும். பெண்கள் பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வர்.

கும்பம்: மனதில் குழப்பம் ஏற்பட்டு மறையும். தொழில், வியாபாரத்தில் இலக்கு படிப்படியாக நிறைவேறும். சுமாரான பணவரவு கிடைக்கும். உடல் நலத்திற்கு சிகிச்சை தேவைப்படலாம். பெண்கள் கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவர்.

மீனம்: புதியவரை நண்பராக ஏற்பதில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் வளர கூடுதல் உழைப்பு தேவைப்படும். லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். பெண்களுக்கு சகோதரவழியில் உதவி கிடைக்கப் பெறுவர்.

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/03/2019

இன்று! விளம்பி வருடம், பங்குனி மாதம் 3ம் தேதி,ரஜப் 9ம் தேதி, 17.3.19 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை,ஏகாதசி திதி மாலை 5:02 ...

%d bloggers like this: