Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 30/09/2019

இன்றைய நாள் எப்படி 30/09/2019

இன்று!
விகாரி வருடம், புரட்டாசி மாதம் 13ம் தேதி, மொகரம் 30ம் தேதி,
30.9.19 திங்கட்கிழமை வளர்பிறை, துவிதியை திதி இரவு 8:25 வரை
அதன் பின் திரிதியை திதி, சித்திரை நட்சத்திரம் இரவு 8:34 வரை
அதன்பின் சுவாதி நட்சத்திரம் சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6:00 — 7:30 மணி
ராகு காலம் : காலை 7:30- – 9:00 மணி
எமகண்டம் : காலை 10:30 –12:00 மணி
குளிகை : பகல் 1:30 — 3:00 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி, ரேவதி
பொது : சந்திர தரிசனம், சிவன் வழிபாடு

 

மேஷம் : உறவினர்களின் உதவி ஊக்கம் தரும். முக்கிய பணி ஒன்றை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். குடும்பத்தில் சுபநிகழ்வு உண்டாகும்.

ரிஷபம் : சவால்களை திறமையுடன் எதிர்கொள்வீர்கள். பலரும் வியந்து பார்க்கின்ற நன்னிலை ஏற்படும். தொழில்,வியாபாரம் செழித்து வளரும். கூடுதல் பணவரவில் சேமிப்பை அதிகரிப்பீர்கள். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும்.

மிதுனம் : சொந்த நலனில் அதிக அக்கறை கொள்வீர்கள். வாக்குறுதி நிறைவேற தாமதமாகும். தொழில், வியாபாரம் செழிக்க புதிய யுக்தி பின்பற்ற வேண்டும். அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும்.

மிதுனம் : சொந்த நலனில் அதிக அக்கறை கொள்வீர்கள். வாக்குறுதி நிறைவேற தாமதமாகும். தொழில், வியாபாரம் செழிக்க புதிய யுக்தி பின்பற்ற வேண்டும். அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும்.

கடகம் : நண்பரில் ஒருவர் மாறுபட்ட குணத்துடன் பேசுவார். பொறுமை காப்பதால் நட்பினை பாதுகாக்கலாம். தொழிலில் கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டியதிருக்கும். முக்கிய பணவரவு கிடைக்க தாமதம் ஏற்படும். சீரான ஓய்வு உடல் நலத்திற்கு துணை நிற்கும்.

சிம்மம் : செயல்களில் நல்ல மாற்றம் பின்பற்றுவீர்கள். சூழ்நிலை அனுகூலமாக அமைந்து உதவும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள்.

கன்னி : சிலர் உதவுவது போல பாசாங்கு செய்வர். பெருந்தன்மையுடன் நடந்து சுயகவுரவம் பாதுகாத்திடுவீர்கள். தொழிலில் நிலுவை பணி நிறைவேற்றுவது நல்லது. குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். பெண்கள் நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.

துலாம் : மனதில் உறுதியுடன் செயல்படுவீர்கள். தாமதம் ஏற்படுத்திய பணிகளில் சில நிறைவேறும். தொழில் அபிவிருத்திக்கான பணவரவு கிடைக்கும். உறவினர் இல்ல சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவர்.

விருச்சிகம் : பொது இடங்களில் நிதானித்து பேசுவது நல்லது. தொழில், வியாபாரம் தாமத கதியில் இயங்கும். குடும்பத்துக்கான பண செலவு அதிகரிக்கும். உணவு பொருள் தரம் அறிந்து உண்ணவும். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும்.

தனுசு : மனதில் உற்சாகம் பிறக்கும். திட்டமிட்ட பணியை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும். உபரி பண வருமானம் கிடைக்கும். புத்திரரின் நற்செயல் பெருமை சேர்க்கும்.

மகரம் : நண்பரின் உதவியால் நன்மை பெறுவீர்கள். மனதில் இருந்த தயக்கம் விலகும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

கும்பம் : சிலரது தேவையற்ற விமர்சனம் மன வருத்தம் தரலாம். வாழ்வில் லட்சியங்களை உணர்ந்து பணிபுரிவது நல்லது. தொழில், வியாபாரத்தில் முன்னேற கூடுதல் மூலதனம் தேவைப்படும். உணவு உண்பதில் கட்டுப்பாடு நல்லது.

மீனம் : அறிமுகம் இல்லாதவரிடம் சொந்த விஷயம் பேச வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அக்கறையுடன் பணிபுரிவது அவசியம். குடும்ப தேவைகளுக்கான பணச்செலவு அதிகரிக்கும். நிர்ப்பந்தத்தின் பேரில் பொருட்கள் வாங்க வேண்டாம்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | மனிதனை ஆட்சி செய்யும் நவக்கிரகங்கள்

கிரகம் என்னும் சமஸ்கிருத சொல்லுக்குப் பற்றி இழுப்பது என்று பொருள். ஒன்பது கிரகங்களும் வான்வெளி மண்டலத்தில் தனித்தனியே திகழ்கிறது. இரும்பு ...

%d bloggers like this: