Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 30/06/2019

இன்றைய நாள் எப்படி 30/06/2019

இன்று!
விகாரி வருடம், ஆனி மாதம் 15ம் தேதி, ஷவ்வால் 26ம் தேதி,
30.6.19 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, திரயோதசி திதி நாளை அதிகாலை 4:16 வரை;
அதன் பின் சதுர்த்தசி திதி, கார்த்திகை நட்சத்திரம் காலை 9:08 வரை;
அதன்பின் ரோகிணி நட்சத்திரம், சித்த-அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
ராகு காலம் : மாலை 4:30-6:00 மணி
எமகண்டம் : பகல் 12:00-1:30 மணி
குளிகை : பகல் 3:00-4:30 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : அனுஷம்
பொது : பிரதோஷம். சிவன்,சூரியன் வழிபாடு.

 

மேஷம்: முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபார வளர்ச்சிக்கு சில மாற்றங்களை பின்பற்றுவது நல்லது. உறவினர் வகையில் கூடுதல் பணச்செலவு ஏற்படலாம். பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம்.

ரிஷபம்: சிலரது பேச்சு உங்களை சங்கடப்படுத்தலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாரான அளவில் இருக்கும். புதிய வழிகளில் பணச்செலவு அதிகரிக்கும். பயன்தராத பொருளை வாங்க வேண்டாம். சீரான ஓய்வு உடல்நல பெற உதவும்.

மிதுனம்: நண்பரிடம் கேட்கின்ற உதவி கிடைக்கும். பொறுப்புணர்வுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய வளர்ச்சி உருவாகும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். உறவினர் சுபசெய்தி ஒன்றைச் சொல்வார்.

கடகம்: நீங்கள் பெருமிதம் அடைகின்ற சுபநிகழ்வு குடும்பத்தில் உருவாகும். தொழில், வியாபாரம் செழித்து சமூகத்தில் புகழ்பெறுவீர்கள். பணவரவும், நன்மையும் அதிகரித்து வாழ்க்கைத்தரம் உயரும். இஷ்டதெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம்: முக்கிய பணி ஒன்றை மறந்திடுவீர்கள். குடும்ப உறுப்பினர் நினைவுப்படுத்தி உதவுவர். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். பணவரவை சிக்கன முறையில் பயன்படுத்துவீர்கள். கண்களின் பாதுகாப்பில் கவனம் தேவை.

கன்னி: போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படுத்துவீர்கள். அறிமுகம் இல்லாதவர் தருகிற உணவு உண்ண வேண்டாம்.

துலாம்: எதிர்வரும் பணிகளுக்கு முன்னேற்பாடு செய்வது அவசியமாகும். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி தொந்தரவு தரலாம். அளவான பணவரவு கிடைக்கும். போக்குவரத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்: மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் செழித்து ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். மனைவி விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித்தருவீர்கள்.

தனுசு: மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். கருணை மனதுடன் அன்பு பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் வெகுநாள் விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள்.

மகரம்: உங்கள் இரக்க குணத்தினால் மாறுபட்ட சூழல் உருவாகலாம். தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறுகளை தாமதமின்றி சரி செய்வது நல்லது. குறைந்த அளவில் பணவரவு இருக்கும். உடல் நலத்திற்கு சிறு அளவிலான மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

கும்பம்: உங்களுக்கு தொல்லை கொடுத்தவர் இடம் மாறிப் போகிற சூழ்நிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். தாயின் தேவையை நிறைவேற்றி அன்பு, ஆசி பெறுவீர்கள்.

மீனம்: நண்பரின் உதவி கிடைக்கும். மனதில் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். சுகமான நித்திரை அமைந்து இனிய கனவு வரும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 20/10/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 3ம் தேதி, ஸபர் 20ம் தேதி, 20.10.19 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, சப்தமிதிதி இரவு ...

%d bloggers like this: