Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 29/09/2019

இன்றைய நாள் எப்படி 29/09/2019

இன்று!
விகாரி வருடம், புரட்டாசி மாதம் 12ம் தேதி, மொகரம் 29ம் தேதி,
29.9.19 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை, பிரதமை திதி இரவு 10:29 வரை
அதன் பின் துவிதியை திதி, அஸ்தம் நட்சத்திரம் இரவு 9:53 வரை
அதன் பின் சித்திரை நட்சத்திரம், அமிர்த — சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30 -9:00 மணி
ராகு காலம் : மாலை 4:30 -6:00 மணி
எமகண்டம் : பகல் 12:00–1:30 மணி
குளிகை : பகல் 3:00 –4:30 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி, உத்திரட்டாதி
பொது : சூரியன் வழிபாடு

 

மேஷம்: செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். விலகி சென்றவரும் அன்பு பாராட்டுவர். தொழிலில் உற்பத்தி , விற்பனை அதிகரிக்கும். கூடுதல் பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு சமரச பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படும்.

ரிஷபம் : முக்கியமான செயலை பிறரிடம் ஒப்படைக்க கூடாது. நிதானித்து பேசுவதால் நற்பெயரை பாதுகாக்கலாம். தொழில், வியாபாரம் சுமாராக இருக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம். பிள்ளைகளின் செயல் பெருமை சேர்க்கும்.

மிதுனம் : செயல்களில் நிதானம் பின்பற்ற வேண்டும். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை உடனடியாக சரி செய்வது அவசியம். ஆடம்பர பணச்செலவு தவிர்க்கவும். ஒவ்வாத உணவு உண்ணக்கூடாது. பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும்.

கடகம் : மனதில் ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளை இலகுவாக நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை முன்னேற்றம் பெறும். உபரி பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்வு ஏற்படும்.

சிம்மம் : புதிய பணிகள் மனதில் சஞ்சலம் ஏற்படுத்தும். நற்பெயரை பாதுகாக்க சிலரது உதவியை நாடுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். குடும்ப தேவைக்கான பணச்செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

கன்னி : உங்களை அவமதித்தவர் தன்குறை உணர்ந்து அன்பு பாராட்டுவர். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள்.

துலாம் : சுய லாபத்திற்காக சிலர் உங்களை புகழ்ந்து பேசுவர். தொழிலில் இலக்கை அடைய கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். பெண்கள் நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.

விருச்சிகம் : வெகுநாள் தாமதமான செயலில் புதிய திருப்பம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி செய்வீர்கள். நிலுவை பணம் வசூலாகும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

தனுசு : இஷ்ட தெய்வத்தின் அனுக்கிரகம் துணை நின்று உதவும். சிறு செயலையும் நேர்த்தியாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து மனநிறைவை தரும். நிலுவை பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள்.

மகரம் : மன உறுதியுடன் பணிபுரிவதால் திட்டமிட்ட செயல் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். பிறர் பார்வையில் தெரியும்படி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனம் வேண்டும்.

கும்பம் : உங்கள் மனதில் குழப்பமான சிந்தனை உருவாகி சிரமம் தரலாம். நண்பரின் மதிநுட்பம் நிறைந்த ஆலோசனை நம்பிக்கை தரும். தொழில் இலக்கு தாமதமாக பூர்த்தியாகும். குடும்ப தேவைகளுக்கான பணச்செலவு அதிகரிக்கும்.

மீனம் : செயல்களின் நல்ல மாற்றம் பின்பற்றுவீர்கள். சூழ்நிலை அனுகூலமாக அமைந்து உதவும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 09/10/2019

இன்று! விகாரி வருடம், புரட்டாசி மாதம் 22ம் தேதி, ஸபர் 9ம் தேதி, 9.10.19 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: