Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 28/11/2019

இன்றைய நாள் எப்படி 28/11/2019

இன்று!
விகாரி வருடம், கார்த்திகை மாதம் 12ம் தேதி, ரபியுல் அவ்வல் 30ம் தேதி,
28.11.19 வியாழக்கிழமை, வளர்பிறை, துவிதியை திதி இரவு 7:59 வரை,
அதன்பின் திரிதியை திதி, கேட்டை நட்சத்திரம் காலை 9:46 வரை,
அதன்பின் மூலம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10:30 – 12:00 மணி
ராகு காலம் : பகல் 1:30 – 3:00 மணி
எமகண்டம் : காலை 6:00 – 7:30 மணி
குளிகை : காலை 9:00 – 10:30 மணி
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : கார்த்திகை
பொது : சந்திர தரிசனம், தட்சிணாமூர்த்தி வழிபாடு.

 

மேஷம்: சுற்றுப்புற சூழல் தொந்தரவு தரலாம். லட்சியங்களை உணர்ந்து செயல்படுவது அவசியமாகும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல் நலம் பாதுகாக்கலாம்.

ரிஷபம்: பகைமை குணம் உள்ளவர் உங்களை அவமதித்து பேசுவார். பெருந்தன்மை குணத்துடன் விலகுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். சொத்தின் பேரில் அதிக பணம் கடன் பெற வேண்டாம்.

மிதுனம்: எதிர் கால நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் சில மாற்றம் பின்பற்றுவீர்கள். பண பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஞாபக திறன் வளரும்.

கடகம்: சிந்தனையில் புதிய மாற்றம் உருவாகும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி பெறலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை திருப்திகரமாகும். சேமிக்கும் அளவில் பண வரவு கிடைக்கும். மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள்.
சிம்மம்: அவசர பணி உருவாகி சிரமம் தரலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாக்கவும். பண வரவை விட செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும்.

கன்னி : சிலரது பேச்சு சங்கடம் உருவாக்கும். சொந்த பணிகளில் கவனம் கொள்வது நல்லது. தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். அத்தியாவசிய செலவுக்கு கொஞ்சம் பண கடன் பெறுவீர்கள். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

துலாம்: உங்களின் திறமையை வளர்த்து கொள்வீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். தாராள பண வரவு கிடைக்கும். நண்பருடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர்.
விருச்சிகம்: உங்கள் பேச்சு, செயலில் நிதானம் அவசியம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். அளவான பண வரவு உண்டு. உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை உதவும். புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.
தனுசு: புதிய பணிகள் குறுக்கிடலாம். தெய்வ நம்பிக்கையால் உற்சாகமுடன் செயல்படுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். பணியாளர்களுக்கு பாராட்டு, வெகுமதி வந்து சேரும்.
மகரம் : உங்களின் கருத்தை குடும்ப உறுப்பினர்கள் ஏற்க தயங்குவர். தொழிலில் உள்ள அனுகூலத்தை பாதுகாக்கவும். அளவான பண வரவு கிடைக்கும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.
கும்பம் : சிறு பணியும் நேர்த்தியாக அமைந்து அதிக நன்மை பெறுவீர்கள். தொழிலில் திட்டமிட்ட இலக்கு பூர்த்தியாகும். லாப விகிதம் அதிகரிக்கும். வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள். சுகமான நித்திரை அமைந்து இனிய கனவு வரும்.
மீனம் : புதியவர்களின் நட்பு கிடைக்கும். இனிய நிகழ்வுகளை பேசி மகிழ்வீர்கள். தொழிலில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். உபரி பண வரவு கிடைக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 27/05/2020

இன்று! சார்வரி வருடம், வைகாசி மாதம் 14ம் தேதி, ஷவ்வால் 3ம் தேதி, 27.5.2020 புதன்கிழமை, வளர்பிறை பஞ்சமி திதி ...

%d bloggers like this: