Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 28/10/2018

இன்றைய நாள் எப்படி 28/10/2018

இன்று!

விளம்பி வருடம், ஐப்பசி மாதம் 11ம் தேதி, ஸபர் 18ம் தேதி,
28.10.18 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, சதுர்த்தி திதி மாலை 6:38 வரை;
அதன் பின் பஞ்சமி திதி, ரோகிணி நட்சத்திரம் காலை 9:31 வரை;
அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம், அமிர்த–சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30–6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00–1:30 மணி
* குளிகை : மதியம் 3:00–4:30 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : அனுஷம்
பொது : முகூர்த்தநாள், சூரியன் வழிபாடு,
வாஸ்து நாள், பூஜை நேரம் காலை 7:44 மணி – 8:20 மணி.

மேஷம்: கவனக்குறைவால் சிரமத்திற்கு ஆளாகலாம். நண்பரிடம் விவாதம் பேச வேண்டாம். தொழில், வியாபாரம் தாமத கதியில் இயங்கும். அளவான பணவரவு கிடைக்கும். மாணவர்கள் பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்.

ரிஷபம்: திட்டமிட்டு பணியில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்ப்பு சிறப்பாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வியத்தகு முன்னேற்றம் ஏற்படும். உபரி வருமானத்தால் சேமிப்பு உயரும். மாமன், மைத்துனருக்கு உதவுவீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

மிதுனம்: மாறுபட்ட சூழ்நிலையால் சிரமத்திற்கு ஆளாகலாம். தொழில், வியாபாரத்தில் புதிய அணுகுமுறை நன்மையளிக்கும். பணவிஷயத்தில் விழிப்புடன் செயல்படவும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். சீரான ஒய்வு உடல்நலத்தை பாதுகாக்கும்.

கடகம்: எண்ணத்தில் நேர்மை வெளிப்படும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணியில் ஈடுபடுவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். மனைவி விரும்பிக் கேட்ட பொருட்களை வாங்கித் தருவீர்கள்.

சிம்மம்: ஆன்மிக நம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரித்து புதிய சாதனை படைப்பீர்கள். கூடுதல் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவர்.

கன்னி: திட்டமிட்ட பணிகளில் தாமதம் உருவாகலாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். திடீர் செலவால் சேமிப்பு கரையும். பணியாளர்கள் பணிச்சுமையால் திண்டாடுவர். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம்.

துலாம்: மனதில் குழப்பம் ஏற்படலாம். தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். மிதமான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். புதிய இனங்களில் செலவு ஏற்படும். பிள்ளைகளின் செயல்பாடு ஆறுதல் அளிக்கும்.

விருச்சிகம்: வாழ்வில் அனுகூல பலன் தேடி வரும். நல்லவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி அதிகரிப்பால் வியத்தகு வளர்ச்சி உண்டாகும். தாராள லாபம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

தனுசு: உற்சாக மனதுடன் பணிபுரிவீர்கள். நண்பர்களின் பாராட்டு கிடைக்கும்.தொழில் வளர்ச்சியால் பணவரவு அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் குடும்பத்துடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வர்.

மகரம்: பணி நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். குடும்ப விஷயம் பிறரிடம் பேச வேண்டாம். கடின உழைப்பால் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். அதிக விலையுள்ள பொருளை கவனமுடன் பாதுகாக்கவும்.பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க கூடாது.

கும்பம்: செயல் நிறைவேற விடாமுயற்சி தேவைப்படும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனம் பின்பற்றவும்.. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மீனம்: உறவினர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். லாபம் உயரும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் நன்மதிப்பை பெறுவர். பெண்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவர்.

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 15/12/2018

இன்று! விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 29ம் தேதி, ரபியுல் ஆகிர் 7ம் தேதி, 15.12.18, சனிக்கிழமை, வளர்பிறை அஷ்டமி ...

%d bloggers like this: