Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 28/08/2019

இன்றைய நாள் எப்படி 28/08/2019

மேஷம் : உங்கள் செயல்களில் சீர்திருத்தம் தேவைப்படும். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம். தொழிலில் நிலுவைப் பணி நிறைவேற்றுவது நல்லது. பணவரவை விட செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும்.

ரிஷபம் : பிறர் பாராட்டும் வகையில் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற புதிய திட்டம் உருவாக்கும். கூடுதல் பணவரவு கிடைக்கும். புதிய வாகனம் வாங்க நல்யோகம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி ஒற்றுமை அதிகரிக்கும்.

மிதுனம் : நண்பரை குறை சொல்ல வேண்டாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடு வரலாம். பொறுமையுடன் செயல்படுவதால் சிரமம் விலகும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு வேண்டும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும்.

கடகம் : உறவினரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தாமதமான பணியை புதிய உத்தியால் நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். உபரி பணவரவு கிடைக்கும். கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள்.

சிம்மம் : எவரிடமும் சுயபெருமை பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் உருவாகிற இடையூறை தாமதமின்றி சரிசெய்ய வேண்டும். அளவான பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மிகவும் தேவையாகும். சத்தான உணவு உண்பதால் ஆரோக்கியம் பலம்பெறும்.

கன்னி : உங்களை அவமதித்தவர் அன்பு பாராட்டுகிற இனிய சூழல் உருவாகும். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை ஏற்படும். பணப் பரிவர்த்தனை திருப்திகரமாகும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். சுகமான நித்திரை அமைந்து இனிய கனவு வரும்.

துலாம் : பரந்த மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். புதியவர்களின் அன்பு உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் செழிக்க சில மாற்று உபாயம் பின்பற்றுவீர்கள். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். புத்திரரின் நற்செயல் பெருமை தேடித்தரும்.

விருச்சிகம் : உங்கள் நற்செயலுக்கான பாராட்டு வந்து சேரும். மனதில் உற்சாகம் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க புதிய யுக்தி பயன்படும். அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத அழகு சாதனைப் பொருள் பயன்படுத்த வேண்டாம்.

தனுசு : மனதில் சஞ்சலம் ஏற்படலாம். . தொழிலில் கூடுதல் உழைப்பினால் உற்பத்தி விற்பனை சீராகும். அளவான பணவரவு கிடைக்கும். தரம் குறைந்த உணவுப் பொருள் கவனக்குறைவால் வாங்க நேரிடலாம். தாயின் அன்பு ஆசி நம்பிக்கைத் தரும்.

மகரம் : உங்களின் இஷ்ட தெய்வ அனுக்கிரகம் பெறுவீர்கள். வெகுநாள் மனதில் இருந்த சஞ்சலம் தீரும். அதிக உழைப்பினால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணப்பரிவர்த்தனை சீராகும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள்.

கும்பம் : சிறு பணியையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அளப்பரிய வளர்ச்சி ஏற்படும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். மாமன் மைத்துனருக்கு உதவுவீர்கள். சுற்றுலா சென்று வர பயணத்திட்டம் உருவாகும்.

மீனம் : பணி நிறைவேற பொறுமை அவசியம். தொழிலில் உள்ள குறைகளை பிறரிடம் விவாதிக்க வேண்டாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். அரசு தொடர்பான அனுகூலம் தாமதமாகலாம். தியானம், தெய்வ வழிபாடு மனதில் சாந்தம் தரும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 02/08/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 18ம் தேதி, துல்ஹஜ் 11ம் தேதி, 2.8.2020 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி ...