Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 27/11/2019

இன்றைய நாள் எப்படி 27/11/2019

இன்று!
விகாரி வருடம், கார்த்திகை மாதம் 11ம் தேதி, ரபியுல் அவ்வல் 29ம் தேதி,
27.11.19 புதன்கிழமை, வளர்பிறை, பிரதமை திதி இரவு 8:33 வரை;
அதன் பின் துவிதியை திதி, அனுஷம் நட்சத்திரம் காலை 9:55 வரை;
அதன்பின் கேட்டை நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9:00 – 10:30 மணி
ராகு காலம் : பகல் 12:00 – 1:30 மணி
எமகண்டம் : காலை 7:30 – 9:00 மணி
குளிகை : காலை 10:30 – 12:00 மணி
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : பரணி
பொது : பெருமாள் வழிபாடு.

 

மேஷம்: சிலர் தேவையற்ற ஆலோசனை சொல்வர். சுயமான செயல் பலனை பெற்று தரும். தொழில், வியாபாரம் சுமாராக இருக்கும். புதிய இனங்களில் பண செலவு ஏற்படலாம். தியானம், தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.
ரிஷபம் : தாமதமான பணியை உத்வேகமுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாகும். பண பரிவர்த்தனையில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப தேவைகளை தாராள பண செலவில் நிறைவேற்றுவீர்கள்.
மிதுனம் : செயல்களை திட்டமிட்டு துவங்குவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி மேற்கொள்வீர்கள். நிலுவை பணம் வசூலாகும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.
மிதுனம் : செயல்களை திட்டமிட்டு துவங்குவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி மேற்கொள்வீர்கள். நிலுவை பணம் வசூலாகும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.
கடகம்: குடும்ப உறுப்பினர் இயன்ற அளவில் உதவுவர். தொழிலில் உருவாகிற இடையூறை உடனடியாக சரி செய்வது நல்லது. குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். அதிக பயன் தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.
சிம்மம் : உங்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகலாம். உண்மை, நேர்மை, குணம் தவறாமல் பின்பற்றுவது பலன் தரும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். அளவான பண வரவு கிடைக்கும். சீரான ஓய்வு உடல் நலம் பாதுகாக்கும்.
கன்னி: பணிகள் நிறைவேற முன்னேற்பாடு செய்வீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். சுப செலவு செய்து மகிழ்வீர்கள்.

துலாம்: வாழ்வில் முன்னேற்றம் பெற புதிய வாய்ப்பு வரும். தொழிலில் புதிய நுட்பங்களை பயன்படுத்துவது அவசியம். பண வரவை விட குடும்பத்திற்கான செலவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை உதவும்.

விருச்சிகம்: எதிரியினால் உருவான சிரமம் செயலிழந்து போகும். பணியை திறம்பட நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். ஆதாய பண வரவு கிடைக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.
தனுசு: குணம் கெட்ட ஒருவருக்கு உதவி செய்து பின்னர் மனம் வருந்துவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளர கூடுதல் பணி புரிவது அவசியம். பண செலவில் சிக்கனம் வேண்டும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.
மகரம் : உறவினருக்கு உதவி செய்வீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். ஆதாய பண வரவு கிடைக்கும். புத்திரரின் தேவையை நிறைவேற்றுவீர்கள். வெகு நாள் காணாமல் தேடிய பொருள் கை வந்து சேரும்.
கும்பம் : அற பணியில் ஈடுபடுவீர்கள். உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை இலக்கு பூர்த்தியாகும். உபரி பண வரவு கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
மீனம் : திறமையுடன் செயல்படுவதால் மட்டுமே திட்டமிட்ட பணி நிறைவேறும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். குறைந்த அளவில் பண வரவு கிடைக்கும். மாமன், மைத்துனர் உதவிகரமாக நடந்து கொள்வர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 01/12/2019

இன்று! விகாரி வருடம், கார்த்திகை மாதம் 15ம் தேதி, ரபியுல் ஆகிர் 3ம் தேதி, 1.12.19 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, பஞ்சமி ...

%d bloggers like this: