Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 27/10/2018

இன்றைய நாள் எப்படி 27/10/2018

இன்று!

விளம்பி வருடம், ஐப்பசி மாதம் 10ம் தேதி, ஸபர் 17ம் தேதி,
27.10.18 சனிக்கிழமை, தேய்பிறை, திரிதியை திதி இரவு 8:19 வரை;
அதன் பின் சதுர்த்தி திதி, கார்த்திகை நட்சத்திரம் காலை 10:22 வரை;
அதன்பின் ரோகிணி நட்சத்திரம், அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி
* குளிகை : காலை 6:00–7:30 மணி
* சூலம் : கிழக்கு

* பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : விசாகம்
பொது : சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் வழிபாடு.

மேஷம்: பகைவரிடம் விலகி சுயகவுரவம் பாதுகாத்திடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கூடுதல் முயற்சி தேவைப்படும். பணவிஷயத்தில் விழிப்புடன் இருக்கவும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை.

ரிஷபம்: மனதில் புத்துணர்வு மேலோங்கும். பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை வியத்தகு அளவில் இருக்கும். சேமிக்கும் விதத்தில் லாபம் வரும். பெண்களுக்கு பிள்ளைகளின் நற்செயல் பெருமை தேடித்தரும்.

மிதுனம்: பணிகளில் குளறுபடி ஏற்படலாம் கவனம். நலம் விரும்புவோரின் ஆலோசனை நன்மையளிக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். பெண்களுக்கு வீட்டுச் செலவு அதிகரிக்கும். சீரான ஓய்வு உடல் நலனை பாதுகாக்கும்.

கடகம்: பணியில் நேர்த்தியும், கலை ரசனையும் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவர்.

சிம்மம்: பகைவர் தொந்தரவு விலகும். உறவினரால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் அபரிமிதமான வளர்ச்சி பெறும். தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு காண்பர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

கன்னி: பொது இடங்களில் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வருமானம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் சகஊழியர்களுடன் கருத்துவேறுபாடு கொள்வர். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம்.

துலாம்: மனதில் உறுதியுடன் செயல்பட்டு நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் இருக்கிற குளறுபடி சரியாகும். லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைத் திறம்பட சமாளிப்பர். பெண்களுக்கு சுபச்செலவு அதிகரிக்கும்.

விருச்சிகம்: ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவீர்கள். இஷ்ட தெய்வ அருள் துணை நிற்கும். தொழிலில் உற்பத்தி விற்பனையில் புதிய சாதனை உருவாகும்.பணவரவால் சேமிப்பு கூடும். பெண்கள் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவர்.

தனுசு: எதிர்ப்பாளரால் உருவான தொந்தரவு விலகும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாயம் பன்மடங்கு உயரும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

மகரம்: பேச்சு, செயலில் நிதானம் பின்பற்றவும். புதியவர்களின் வருகையால் தொழில் வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். சுமாரான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும்.

கும்பம்: சூழல் உணர்ந்து பேசுவது நல்லது. தொழிலில் இலக்கு நிறைவேற கூடுதல் அவகாசம் தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் பயன்தராத பொருளை வாங்க வேண்டாம்.

மீனம்: பொதுநலன் கருதி செயல்படுவீர்கள். நற்பெயரும் புகழும் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். வருமானம் திருப்தியளிக்கும். பணியாளர்கள் செல்வாக்குடன் திகழ்வர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 15/12/2018

இன்று! விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 29ம் தேதி, ரபியுல் ஆகிர் 7ம் தேதி, 15.12.18, சனிக்கிழமை, வளர்பிறை அஷ்டமி ...

%d bloggers like this: