Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 27/09/2019

இன்றைய நாள் எப்படி 27/09/2019

மேஷம் : குடும்ப உறுப்பினர் இயன்ற அளவில் உதவுவர். தொழிலில் உருவாகிற இடையூறை உடனடியாக சரி செய்வது நல்லது. குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.

ரிஷபம் : நண்பரில் சிலர் தேவையற்ற ஆலோசனை சொல்வர். தொழில் , வியாபார நடைமுறை சராசரி அளவில் இயங்கும். புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படலாம். தியானம், தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.

மிதுனம் : செயல்களை திட்டமிட்டு துவங்குவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி மேற்கொள்வீர்கள். நிலுவை பணம் வசூலாகும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.

கடகம் : நிகழ்வுகள் மாறுபட்டதாக அமையலாம். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய புதிய நுட்பங்களை பயன்படுத்துவது அவசியம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். உடல்நலம் ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை உதவும்.

சிம்மம் : எதிரியினால் உருவாக்கப்பட்ட சிரமம் செயலிழந்து போகும். புதிதாக வருகிற பணியை திறம்பட நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். விரும்பிய உணவு உண்டு, மகிழ்வீர்கள்.

கன்னி : குணம் கெட்ட ஒருவருக்கு உதவி செய்து பின்னர் மனம் வருந்துவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளர கூடுதல் பணிபுரிவது அவசியம். பண செலவில் சிக்கனம் வேண்டும். உணவு பொருள் தரம் அறிந்து உண்ணவும். வாகன பராமரிப்பு பயணத்தை எளிதாக்கும்.

துலாம் : உங்கள் செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாகும். பண பரிவர்த்தனையில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப தேவைகளை தாராள பண செலவில் நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம் : உறவினர் தந்த உதவிக்கு மறு உபகாரம் செய்வீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். புத்திரரின் தேவையை தாராள பண செலவில் நிறைவேற்றுவீர்கள்.

தனுசு : உங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகலாம். உண்மை, நேர்மை, குணம் தவறாமல் பின்பற்றுவது நற்பலன் தரும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். அளவான பணவரவு கிடைக்கும். சீரான ஓய்வு உடல் நலம் பாதுகாக்கும்.

மகரம் : திறமையுடன் செயல்படுவதால் பணி நிறைவேறும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். மாமன், மைத்துனர் உதவிகரமாக நடந்து கொள்வர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கும்பம் : எதிர் வரும் பணிகள் சிறப்பாக நிறைவேற முன்னேற்பாடு செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். சுபச்செலவு செய்து மகிழ்வீர்கள்.

மீனம் : நண்பரிடம் கலை ரசனையுடன் பேசுவீர்கள். உற்பத்தி, விற்பனை இலக்கு குறித்த காலத்தில் பூர்த்தியாகும். உபரி பண வருமானம் கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள்.

 அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 09/10/2019

இன்று! விகாரி வருடம், புரட்டாசி மாதம் 22ம் தேதி, ஸபர் 9ம் தேதி, 9.10.19 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: