Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 26/11/2019

இன்றைய நாள் எப்படி 26/11/2019

இன்று!
விகாரி வருடம், கார்த்திகை மாதம் 10ம் தேதி, ரபியுல் அவ்வல் 28ம் தேதி,
26.11.19 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, அமாவாசை திதி இரவு 9:32 வரை;
அதன்பின் பிரதமை திதி, விசாகம் நட்சத்திரம் காலை 10:29 வரை;
அதன்பின் அனுஷம் நட்சத்திரம், மரண, சித்தயோகம்;.

நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
ராகு காலம் : பகல் 3:00 – 4:30 மணி
எமகண்டம் : காலை 9:00 – 10:30 மணி
குளிகை : பகல் 12:00 – 1:30 மணி
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : அசுவினி
பொது : அமாவாசை விரதம், சிவன் கோயில்களில் சங்காபிேஷகம், துர்கை வழிபாடு, கரிநாள்.

 

மேஷம்: நண்பருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழிலில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி தொந்தரவு தரலாம். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.
ரிஷபம்: உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் நிலுவை பணி நிறைவேறும். உபரி பணவரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு சலுகை வந்து சேரும். வெளியூர் பயணம் ஏற்படலாம்.
மிதுனம் : உங்கள் மனதில் பிறருக்கு உதவுகிற சிந்தனை அதிகரிக்கும். தொழிலில் இருந்த குளறுபடி சரியாகும். தாராள பணவரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். நண்பருடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.
கடகம்: செயலில் தடுமாற்றம் உருவாகலாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். உறவினர் வகையில் அதிக பணம் செலவு செய்ய நேரிடலாம். வாகனத்தில் மித வேகம் பயணத்தை எளிதாக்கும்.
சிம்மம் : உங்களின் மன குறையை பிறரிடம் சொல்ல வேண்டாம். இதனால் சுய கவுரவம் பாதுகாக்கலாம். தொழில், வியாபாரத்தில் பணி சுமை அதிகரிக்கும். அளவான பண வரவு கிடைக்கும். உணவு உண்பதில் கட்டுப்பாடு அவசியம்.
கன்னி : உங்களின் நற்செயல் கண்டு புதியவர் அன்பு பாராட்டுவார். மனம், செயலில் புத்துணர்வு பிறக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பண வரவு திருப்திகரமாகும். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
துலாம்: உங்கள் செயல்களில் நிதானம் வேண்டும். தொழிலில் இலக்கு நிறைவேற அவகாசம் தேவைப்படும். பண செலவில் சிக்கனம் பின்பற்றவும். குடும்பத்தில் ஒற்றுமை அவசியம். பிறர் பொருளை பாதுகாக்கும் பொறுப்பு ஏற்க வேண்டாம்.
விருச்சிகம்: சிறு நன்மையையும் பெரிதாக எண்ணி மகிழ்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை முன்னேற்றம் பெறும். ஆதாய பண வரவில் பண கடன் செலுத்துவீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிரியால் உருவான தொந்தரவு விலகும்.
தனுசு: உங்கள் மனதில் குழப்பம் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை புதிய நம்பிக்கையை தரும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்க மாற்று உபாயம் பயன்படுத்துவீர்கள். பணவரவு சீராகும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.
மகரம் : முன்னர் செய்த பணிகளுக்கான பலன் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பண பரிவர்த்தனையில் திருப்திகரமான நிலை உண்டு. இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். நித்திரையில் இனிய கனவு வரும்.
கும்பம் : உங்கள் பேச்சில் அதிக அன்பும், பண்பும் கலந்திருக்கும். புதியவரின் நட்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி ஏற்படும். ஆதாய பண வரவு பெறுவீர்கள். பெண்கள் தாய் வீட்டுக்கு உதவுவர்.
மீனம் : திட்டமிட்ட பணியில் மாற்றம் செய்ய நேரிடலாம். தொழில், வியாபாரத்தில் அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. சராசரி பண வரவு கிடைக்கும். வாகன பாதுகாப்பில் கவனம் வேண்டும். மாணவர்கள் படிப்பு தவிர பிற விவாதம் பேச கூடாது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 01/12/2019

இன்று! விகாரி வருடம், கார்த்திகை மாதம் 15ம் தேதி, ரபியுல் ஆகிர் 3ம் தேதி, 1.12.19 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, பஞ்சமி ...

%d bloggers like this: